தன்னம்பிக்கையுடன் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்!
தன்னம்பிக்கையுடன் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்!
UPDATED : நவ 16, 2009 12:00 AM
ADDED : நவ 16, 2009 08:24 AM
டி.வி.ஆர்.,அகாடமி சார்பில் நடந்த தினமலர் ஜெயித்துக்காட்டுவோம்-2009 நிகழ்ச்சி தேனியில் நடந்தது. பத் தாம் வகுப்பு, பிளஸ் டூ படிக்கும் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எதிர் கொள்ளும் விதம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனை விபரம்:
பத்தாம் வகுப்பு:
ஆங்கிலம்-முருகவேல்(அரசு மேல்நிலைப்பள்ளி, அல்லிநகரம்):
குறு வினாக்களில் எளிமையான கேள்விகளை தேர்வு செய்தால் எளிதில் மார்க் பெறலாம். முதல் மூன்று பாடங்கள், கடைசி இரண்டு பாடங்களை முழுமையாக படித்துக்கொள்ள வேண்டும். போயம் பகுதியில் தினமும் ஒரு வரி தவறு இல்லாமல் எழுதி பழக வேண்டும். கடிதம் எழுதுதல் பகுதியில் முழு மார்க் எளிதில் கிடைக்கும்.
அறிவியல்-அசாரியாராஜாமணி(என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
தேனி):
அணு இயற்பியல் பகுதி முக்கியமான பாடம். கவனம் செலுத்த வேண்டும். படம் வரைந்து பாகம் குறி கேள்வியில் எளிதில் மார்க் பெறலாம். கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளர் விதி, பரப்பு இழு விசை, குவிய தூரம் கண்டுபிடிக்கும் முறை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள். பெரிய கேள்விக்கான பதிலில் விதி, படம், விளக் கம், அட்டவணை அவசியம் இருக்க வேண்டும்.
கணிதம்-சுயம்புக்கனி(அரசு மேல்நிலைப்பள்ளி, அல்லிநகரம்): வடி வியல் பகுதியில் உதவிப்படம் அவசியம் இருக்க வேண் டும். வட்ட நாற்கரம், தொடு கோடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள். கிராப் பகுதியில் அளவுத்திட்டம் முக்கியம். முழு மார்க் எளிதில் பெற முடியும். பங்கீட்டு விதி, டிமார்க்கன் விதி, வர்க்கமூலம் காணுதல் முக்கியமான கேள்விகள். கணக்கு பகுதியில் சூத்திரம் முக்கியம் என்பதால் அடிக்கடி எழுதி நினைவில் கொள்ள வேண்டும்.
சமூக அறிவியல்-ராஜாராம்(இந்து மேல்நிலைப்பள்ளி, சக்கம்பட்டி):
பெரிய வினாக்களுக்கான பதிலில் உப தலைப்புகள், முக்கிய இடங்களில் அடிக் கோடு இட வேண்டும். அனைத்து கேள்விகளையும் எழுதவேண்டும். ஐந்து ஆண்டு வினாத்தாள்களில் உள்ளவற்றை படித்தால் ஒரு மார்க், இரண்டு மார்க் வினாக்களுக்கு எளிதில் பதில் எழுத முடியும். கிராம சமூக பொருளாதாரம் அல்லது கிராம சுகாதாரம் பற்றி அடிக்கடி கேட்கப்படுகிறது.
பிளஸ் டூ:
ஆங்கிலம்-மாஸ்கோமணி(என்.எஸ்.,பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி):
ஆங்கிலம் முதல்தாளில் 80 சத மார்க் எளிதில் பெற முடியும். ஆறு பாடங்களில் உள்ள கட்டுரைகளை தெளிவாக படித்துக் கொள்ள வேண்டும். துணைப்பாடம் நடத்தும் போது வகுப்பில் நன்கு கவனித்து கதையை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இ.ஆர்.சி. பகுதியில் எளிதில் மார்க் கிடைக்கும்.
கணிதம்-தினகரன்(ஸ்ரீவ.வே.மேல்நிலைப்பள்ளி, வெங்கடாசலபுரம்):
புத்தகத்தில் உள்ள அனைத்து ஒரு மார்க் கேள்விகளுக்கும் பதில் தெரிந்து கொள்ள வேண் டும். 200 மார்க் பெறுவது எளிது. சூத்திரம் எழுதிப்பழக வேண்டும். முதல் தொகுதியில் 130 மார்க் உண்டு. இரண்டாம் தொகுதியில் 6,9,10 பாடங்கள் முக்கியமானவை. மாதிரித்தேர்வுகள் ஐந்து முறையாவது எழுதி சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இயற்பியல்-மகேஷ்(அரசு மேல்நிலைப்பள்ளி, அல்லிநகரம்):
ஒரு மார்க் வினாக்களில் ஐந்து கேள்விகளும், மூன்று மார்க் வினாக்களில் ஐந்தும், ஐந்து மார்க் வினாக்களில் மூன்றும் கணக்குகள் சார்ந்து இருக்கும். இவைகளுக்கு முக்கியத்துவம் தந்தால்தான் முழு மார்க பெற முடியும். கணக்கு சார்ந்த வினாக்களுக்கு விடையளிக்க முடியாதவர்கள் அறிவியல் கருத்துள்ள கேள்விகளை தேர்வு செய்யவேண்டும்.
வேதியியல்-ஸ்ரீ(அரசு மேல்நிலைப்பள்ளி, பூதிப்புரம்):
சமன்பாடு அதிகம் இல்லாத முதல் தொகுதியிலுள்ள அணு அமைப்பு, பி,டி,எப் தொகுதி தனிமங்கள், உட்கரு வேதியியல், திட நிலைமை, வெப்ப இயக்கவியல், வேதிச் சமநிலை, வேதிவினை, வேகவியல், ஈதர்கள், மின் வேதியியல் பாடங்களை நன்கு படித்தால் 115 மார்க் பெற்று விடலாம். சமன் பாடுகளை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்க வேண்டும். தன்னம்பிக்கை விடாமுயற்சியுடன் படித்தால் முழு மார்க் பெற முடியும்.
தாவரவியல்-உலகராஜா(என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி):
அனைத்து பகுதிகளையும் நன்றாக படித்தால் மட்டுமே ஒரு மார்க் வினாக்களை முழுமையாக எழுத முடியும். அதிக மார்க் பெற இவற்றை நன்கு படிக்க வேண்டும். படம் தேவையான இடத் தில் அவசியம் இருக்க வேண்டும்.
விலங்கியல்-சையதுஅபுதாகிர்(சி.பி.யூ.,மேல்நிலைப்பள்ளி, கம்பம்):
பாஸ் செய்ய விரும்பும் மாணவர்கள் மனித உடற்செல்லியல் பாடத்தை மட்டும் படித்தால் போதுமானது. சுற்று சூழல் அறிவியல், பயன்பாட்டு உயிரியல் பாடங்களை படித்தால் 80 சத மார்க் பெறமுடியும். இவற்றுடன் ஒரு மார்க் கேள்விகளில் கவனம் செலுத்தினால் நூறு சத மார்க் பெற முடியும். இவ் வாறு ஆலோசனை வழங்கினர்.
நிகழ்ச்சியை இணைந்து வழங்கியோர்:
எஸ்.ஆர்.எம்.,பல்கலை சென்னை, பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி ஆண்டிபட்டி, அகிலா ஜூவல்லரி தேனி, அஸ்பயர் லேர்னிங் சென்டர் தேனி, ஸ்ரீகிருஷ்ணா பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் தேனி.
