தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கடலூர் மாவட்டத்தில் காலையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் காலையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் காலையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு


UPDATED : நவ 16, 2009 12:00 AM

ADDED : நவ 16, 2009 08:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2009 12:00 AM ADDED : நவ 16, 2009 08:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலூர் மாவட்டம் மிகவம் பின்தங்கியே உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தேர்ச்சியில் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 இடங்களில் கடந்த சில ஆண்டுகளில் 30வது இடத்திலிருந்து கடந்த ஆண்டு சற்றே முன்னேறி 27 மற்றும் 28வது இடத்தை எட்டியுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர் வில் 71.15 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டு 71.69  சதவீதமாக சொற்ப அளவில் உயர்ந்தது.பிளஸ் 2 தேர்வில் 2008ம் ஆண்டில் 71.09 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டு 74.66  ஆக உயர்ந்தது. அரசு பள்ளிகள் என தனியாக பிரித்து பார்த் தால் 58 சதவீதத்திலிருந்து 63.94 சதவீதமாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 81 சதவீதத்திலிருந்து 81.32 சதவீதமாக உயர்ந்துள்ளது.பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகளில் மட்டும் 2009ல் 5.94 சதவீதம் உயர்ந்ததன் காரணமாக மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதத்தை  உயர்த்தியது குறிப் பிடத்தக்கது.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவதற்கான கையேடும் ஒரு காரணமாகவும் மாவட்ட கல்வி நிர்வாகத்தால் கருதப்படுகிறது. இதன் காரணமாக தற் போது மாவட்ட கல்வி நிர் வாகம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது முழு கவனத்தையும் செலுத்தி மேலும் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தி மாநில அளவில் 10 இடங்களில் இடம் பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தற்போது எஸ்.எஸ். எல்.சி., மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் முதன்மை இடத்தில் வகித்து வரும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைப் போல் கடலூர் மாவட்டத்திலும் மாலை நேர வகுப்புகள் தவிர காலையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜவகர் தலைமையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தலைமையாசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற் கொண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு மட்டும் காலை 8 மணிக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது. அதில் பாடங்களை படிக்க வைப்பது மட்டுமின்றி, முக்கிய வினாக்களை குறித்துக் கொடுத்து படிக்க செய்து அதற்கு டெஸ்ட் வைத்து மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மழையினால்  மாணவ, மாணவிகளின் பாட புத்தகங்கள் சேதமடைந்திருந்தால் அவர்களுக்கு மீண்டும் புதிய புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த மாவட்ட கல்வி நிர்வாகம் ஜெட் வேகத்தில் சென்றாலும், கல் வித்துறையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பெற்றோர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஒத்துழைப்பு இருந்தாலும் காலை மற்றும் மாலை நேர சிறப்பு வகுப்புகளில் மாணவ, மாணவிகள் படிக்கின்றனரா? ஆசிரியர்களால் டெஸ்ட் வைக் கப்படுகிறதா? அதற்கு மதிப்பெண் வழங்கப்படுகிறதா? என்பதை சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ., மாதம் இருமுறை ஆய்வு மேற்கொண்டு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தினால் தேர்ச்சி விகிதத்தில் மாவட்டம் டாப் டென்னில்  ஒரு இடத்தை நிச்சயம் பிடிக்கும்.

கடலூர் மாவட்டத்தில் சி.இ.ஓ.,வாக பதவி வகிப்பவர்கள் மூன்றாண்டுகள் நீடித்ததில்லை. நல்ல அதிகாரிகள் கிடைத்தாலும் அவர்களை விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வகையில் காலி செய்து அனுப்பி விடுகின்றனர்.மாவட்டத்தின் கல்வித் தரம் பற்றி முழுமையாக அறியும் முன் அதிகாரிகள் மாற்றப்படுவதே, மாவட்டம் கல்வியில் மிகவும் பின் தங்க காரணமாக உள்ளது. பிற துறைகள் போல் கல்வித்துறையை பாவிக்காமல் இருந்தால் மாவட்டம் கல்வியில் முன்னேற்றம் காண முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us