தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேட் தேர்வு எழுதறீங்களா? 90 நிமிடம் முன்னால் போகணும்

கேட் தேர்வு எழுதறீங்களா? 90 நிமிடம் முன்னால் போகணும்

கேட் தேர்வு எழுதறீங்களா? 90 நிமிடம் முன்னால் போகணும்


UPDATED : நவ 20, 2009 12:00 AM

ADDED : நவ 20, 2009 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2009 12:00 AM ADDED : நவ 20, 2009 09:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கேட் நுழைவுத்தேர்வு தொடர்பாக புதிய விதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. மேலாண்மைக் கல்விக்காக ஐ.ஐ.எம்., நுழைவுத் தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனால் அந்தப் பொது நுழைவுத் தேர்வு (சி.ஏ.டி.,) இப்போது கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 28 ம் தேதி தொடங்கி டிசம்பர் 7 ம் தேதி வரை பத்து நாட்கள் இந்த தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வழிகாட்டி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ள சில விதிமுறைகள்:

ஒவ்வொரு நாளிலும் இரண்டு முறை தேர்வு நடக்கும். காலை 10 மணிக்கு ஒரு தேர்வும், நண்பகல் 3.30 மணிக்கு ஒரு தேர்வும் நடக்கும். தேர்வு எழுதுபவர்கள் அவர்களுக்குக் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு 2 மணி நேரம் முன்னதாகவே வர வேண்டும்.

குறைந்த பட்சம் 90 நிமிடங்களுக்கு முன்பாவது தேர்வு நடக்கும் இடத்தில் இருக்க வேண்டும். 90 நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வுக்கான நுழைவுச் சீட்டு, சி.ஏ.டி.,வவுச்சர், போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, பெயர் மாற்றம் செய்திருந்தால் அதற்குரிய ஆவணங்கள் இவற்றைக் கொண்டு வரவேண்டும்.

தேர்வு நடக்கும் இடத்தில் விரல் ரேகை பதிவு செய்வதற்குரிய பயோமெட்ரிக் இயந்திரம் இருக்கும். அதில் மாணவர் விரல் ரேகை பதிவுசெய்ய வேண்டும். அப்போது அங்குப் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா அதைப் பதிவு செய்யும்.

தேர்வு ஆரம்பத்தில் முதல் 15 நிமிடங்களில் தேர்வு எழுதுவது குறித்த விளக்கம் அளிக்கப்படும். தேர்வு 2.15 மணி நேரம் நடக்கும். கணினித் திரையின் வலது மேல்பக்கத்தில் கடிகாரம் இருக்கும். கணினித் திரையில், முதலில் பதிலளிக்க வேண்டிய கேள்விகள், பதிலளிக்காமல் விட்ட கேள்விகள், தவறாகப் பதிலளித்த கேள்விகள் இவற்றை அடையாளம் செய்து வைக்க வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us