இசை, ஓவிய, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களின் பதிவுமூப்பு வெளியீடு
இசை, ஓவிய, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களின் பதிவுமூப்பு வெளியீடு
UPDATED : நவ 22, 2009 12:00 AM
ADDED : நவ 22, 2009 06:35 PM
இசையாசிரியர்: இசையில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, டி.டி.சி., பயிற்சி பெற்றவர்கள்.
ஓவியஆசிரியர்: டி.டி.சி., உடன் டிப்ளமோ ஓவியப்பயிற்சி, பட்டப்படிப்புடன் ஓவியம், பெயின்டிங் பயிற்சி பெற்றவர்கள்.
உடற்கல்வி ஆசிரியர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பி.எட் சான்றிதழ், பட்டப்படிப்பு தேர்ச்சி பதிவு செய்தவர்கள்.
மூன்று பிரிவுகளிலும் 2009, ஜூலை 1 அன்று 57 வயதுக்குள் வயது வரம்பும், 2009, நவ. 18 வரை பதிவு செய்துள்ள முன்னுரிமை உள்ளவர், முன்னுரிமை அற்றவர், அனைத்து வகுப்பு ஆண், பெண்கள் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் பங்கேற்கலாம். வேலைவாய்ப்பு பதிவு அட்டை மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் நாளை (நவ., 23ல்) நேரில் வந்து பதிவு மூப்பை சரிபார்க்கலாம், என மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பிச்சம்மா தெரிவித்துள்ளார்.
