UPDATED : நவ 24, 2009 12:00 AM
ADDED : நவ 24, 2009 10:07 AM
இந்நிகழ்ச்சியில்
தமிழக முதல்வர் கருணாநிதியின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் வடலூரில் மூன்று நாள் நடந்த வேலைவாய்ப்பு முகாம் நிறைவு விழாவில், முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை கனிமொழி எம்.பி., வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது : இந்த முகாமில் 54 ஆயிரம் பேர் பதிவு செய்து 36 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மூன்று நாள் நடந்த முகாமில் எ பிரிவில் 10 ஆயிரத்து 287 பேர் கலந்து கொண்டனர். 109 நிறுவனங்கள் பங்குபெற்று 2 ஆயிரத்து 271 பேரை தேர்வு செய்தது. 3 ஆயிரத்து 959 பேரை அடுத்த கட்ட நேர்முக தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் நாள் நடந்த பி பிரிவில் 9 ஆயிரத்து 943 பேர் கலந்து கொண்டனர். 151 நிறுவனங்கள் 5 ஆயிரத்து 772 பேரை தேர்வு செய்தது. 2 ஆயிரத்து 209 பேரை அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட் டுள்ளனர். இறுதி நாள் நடந்த சி பிரிவில் 16 ஆயிரத்து 119 பேர் கலந்து கொண்டனர். 155 நிறுவனங்கள் 11 ஆயிரத்து 55 பேரை தேர்வு செய்துள்ளனர். ஆயிரத்து 849 பேரை அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். . இதன்மூலம் மொத்தம் 19 ஆயிரத்து 98 பேருக்கு வேலை நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஊட்டி, வேலூர், விருதுநகர், காரியாப்பட்டி ஆகிய இடங்களில் நடந்த முகாமை விட கடலூர் மாவட்டத்தில் அதிகம் பேர் கலந்து கொண்டனர். அடுத்த முகாம் ஜனவரி மாதம் திருச்சியில் நடத்தப்படும். இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
