சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு: கபில் சிபல் தகவல்
சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு: கபில் சிபல் தகவல்
UPDATED : நவ 26, 2009 12:00 AM
ADDED : நவ 26, 2009 10:20 AM
அதுவும் பத்தாம் வகுப்புடன் தங்களின் படிப்பை நிறுத்திக் கொள்ளும் மாணவர்கள் தேர்வு எழுத விரும்பினால், அவர்களுக்கு அந்த வசதி செய்து தரப்படும் என்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்தது குறித்து, மத்திய அரசை பல எம்.பி.,க்கள் குறை கூறினர். இந்த முடிவு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் தங்கள் சூழ் நிலைக்கு ஏற்ப கல்வி திட்டத்தை வகுத்துக் கொண்டுள்ளன.
பத்தாம் வகுப்பில் தேர்வு ரத்து என்று கூறி, மத்திய அரசு ஒரு பெரிய குழப்பத்தை உருவாக்குகிறது என்று சரத்யாதவ், சுஷ்மா சுவராஜ் ஆகியோர் மத்திய அரசை குறை கூறினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: மாநில அரசுகள் தங்கள் சூழ் நிலைக்கு ஏற்ப கல்வித் திட்டத்தை நிறைவேற்றி வருகின்றன. மாநில அரசு கல்வித் திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில், இந்த தேர்வு ரத்து என்ற மத்திய அரசின் முடிவு அமலாகாது. கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு கல்வி நிபுணர்கள், நமது தேர்வு முறை மனப்பாடம் செய்யும் திறனை தான் வளர்த்து வருகிறது.
சுயசிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்று குறை கூறி வந்துள்ளனர். ஆகவே, இவ்வாறு குறை கூறுவதை மாற்றவே, சி.பி.எஸ்.இ., யில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முறையை ரத்து செய்து விட்டு, கிரேடுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த முடிவை கிட்டத்தட்ட எல்லா மாநில அரசுகள் வரவேற்று இருக்கின்றன. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
