பருந்தைப் போல் எழுச்சி பெற்றால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்
பருந்தைப் போல் எழுச்சி பெற்றால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்
UPDATED : நவ 26, 2009 12:00 AM
ADDED : நவ 26, 2009 09:54 AM
ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், பர்வீன் சுல்தானா பேசியதாவது:ஜெயித்துக் காட்டுவோம் என்ற இந்நிகழ்ச்சியை, மாபெரும் இயக்கமாக, தினமலர் நடத்தி வருகிறது.
இதற்காக, தினமலர் நிறுவனத்தையும், அதன் ஆசிரியரையும் பெரிதும் பாராட்டுகிறேன். எண்ணம் எப்படியோ, அப்படித் தான் வாழ்க்கை அமையும். வருங்காலத்தில் நீங்கள் என்னவாக ஆக வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ, அது அப்படியே நடக்கும். நானும், மாநகராட்சி பள்ளியில் தான் படித்தேன். அந்தக் காலத்தில், இப்படியொரு வழிகாட்டி நிகழ்ச்சி நடந்திருந்தால், நான் இன்னும் பல மடங்கு உச்சத்திற்கு சென்றிருப்பேன்.
எனக்கு கிடைக்காத வாய்ப்பு, உங்களுக்கு கிடைத்திருக்கிறது.பத்தாம் வகுப்பு, வாழ்க்கையின் திறவுகோல். தேர்வை, மகிழ்ச்சியாக சந்திக்க வேண்டும்.தெரியாத பதில்களையும், சந்தேகங்களையும், ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். மாநகராட்சி பள்ளிகளில் படிப்பவர்கள், சுமார் ரகம் என்ற பார்வை பொதுவாக இருக்கிறது.
அதை நீங்கள் உடைத்தெறிய வேண்டும்.அதிக மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதல் மாணவராக வருவேன் என்று இன்றே நீங்கள் உறுதியேற்க வேண்டும். அப்படி நினைத்தால், அதன்படி செயல்பட்டால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.பருந்தின் ஆயுட்காலம் 160 ஆண்டுகள். ஆனால், எல்லா பருந்துகளும் 160 ஆண்டுகள் வாழ்வதில்லை. பெரும்பாலான பருந்துகள், 60, 70 ஆண்டுகளில் பசியின் காரணமாக இறந்து விடுகின்றன. 70 ஆண்டுகள் ஆகிவிட்டால், சிறகுகள் உதிர்ந்துவிடும்.
கூர்மையான நகங்கள் மழுங்கி, உடைந்துவிடும். அலகும் உறுதியை இழக்கும்.இதனால், தனக்கு தேவையான இரையை தேடி உண்ண முடியாமல், பசியால் இறக்கின் றன.ஆனால், சில பருந்துகள் 160 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. மற்ற பருந்துகளுக்கு பிரச்னை வரும்போது, உயரே பறந்து சென்று மலைப்பகுதியில் உட்கார்ந்து விடும்.
அதுவே, உடலில் உள்ள சிறகுகளை பாதி அளவுக்கு கொத்தி, கொத்தி பிடுங்கி விடுகின்றன.ரத்தம் வழியும் நிலையிலும், நகங்களை ரத்தம் சொட்ட பிடுங்கி விடும்.அலகையும், பாறையில் மோதி பாதி அளவிற்கு உடைத்து விடுகிறது.
அதன்பின், புதிதாக நகங்கள் முளைக்கின்றன. புதிய அலகு தோன்றுகிறது. புதிய சிறகுகளும் முளைக்க ஆரம்பிக்கின்றன. எல்லாம் புதிதாக வந்ததும், அதன்பின் 70 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.பருந்தைப் போல், மாணவர்கள் எழுச்சிகொண்டு, வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்ல வேண்டுமெனில், கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால், வெற்றி உங்களது காலடியில் முத்தமிடும். உங்களுக்காக, தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பாடுபடுகிறார்.அவர் தருகின்ற இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வாழ்க்கையில் மாணவர்கள் முன்னேற வேண்டும்.இவ்வாறு பர்வீன் சுல்தானா பேசினார்.
