தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நல்ல நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டால் வெற்றி பெறலாம்

நல்ல நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டால் வெற்றி பெறலாம்

நல்ல நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டால் வெற்றி பெறலாம்


UPDATED : நவ 27, 2009 12:00 AM

ADDED : நவ 27, 2009 04:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2009 12:00 AM ADDED : நவ 27, 2009 04:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநகராட்சி பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கான தினமலர், ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், ரமேஷ் பிரபா பேசியதாவது:


மாநகராட்சி பள்ளியில் படித்தால், சரியான வேலை வாய்ப்பு பெற முடியாது என்பது கிடையாது. நான் மாநகராட்சி பள்ளியில், தமிழ் மீடியத்தில் படித்தவன். தனியார் பள்ளிகளில், 80 சதவீத மதிப்பெண் பெற்றவர்களை சேர்த்து, அவர்களை 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற வைக்கின்றனர்.


கடந்தாண்டு நடந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று எம்.ஐ. டி.,யில் படித்துக் கொண்டிருப்பவர், மாநகராட்சி பள்ளியில் படித்த மாணவி. மாநகராட்சிப் பள்ளியில் படிப்பவர்களும், வாழ்வில் முன்னேற முடியும். தாய்மொழியில் நாம் பாடத்தைப் படிக்கும் போது, புரிந்து படிக்கிறோம். அறிவியல் பிரிவு மாணவர்களை பொறுத்தவரை, 30 வருடத்திற்கு முன் வரை, பொறியியல் மற்றும் டாக்டர் ஆக வேண்டும் என்று தான் சொல்வர். ஏனென்றால், நிறைய படிப்பு-கள் முன்பு இல்லை.


மாணவர்கள் படிப்பைத் தேர்ந்தெடுக்கும் போது, ஒரு பிரிவிற்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், மற்ற பிரிவுகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். உதாரணமாக எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு, அதிக வரவேற்பு உள்ளது. எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பித்து கிடைக்காவிட்டால், சோர்வடைந்து விடக் கூடாது.


பல் மருத்துவம், கண் மருத்துவம், பி.எஸ்சி., நர்சிங், சித்தா, யுனானி, ஆயுர்வேதம் என, பல படிப்புகள் உள்ளன. அவற்றிற்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.


நாம் எந்த பிரிவில் சிறந்து விளங்குகிறோம் என்று தெரிந்து, அப்பிரிவை தேர்ந்தெடுத்தால், அதில் சிறந்து விளங்கலாம். பிளஸ் 2 படிப்பவர்கள் விடலைப் பருவத்தில் இருப்பவர்கள்; படிப்பை விட்டு திசைமாற வாய்ப்புகள் அதிகம்.


இன்றைய சினிமாக்கள், காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்காமல், சிந்தனைகளை சிதறவிடாமல், அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், வாழ்வில், வெற்றி பெறலாம். கவனச் சிதறலால், படிப்பு பாதிக்கப்படுகிறது.


ஒவ்வொரு குடும்பத்திலும் சம்பந்தப்பட்ட மாணவனைப் பற்றி, எதிர்காலத்தில் சிறந்தவராக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பும், சிந்தனையும் உள்ளது. அந்த எதிர்பார்ப்பை நாம், பூர்த்தி செய்ய வேண்டும்.


தனியாக இருந்தால், தவறான சிந்தனைகள் வளரும். எப்போதும் நல்ல நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்; வாழ்வில் வெற்றி பெறலாம். இவ்வாறு ரமேஷ் பிரபா பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us