UPDATED : நவ 28, 2009 12:00 AM
ADDED : நவ 28, 2009 12:10 PM
அ நிறம் | அளவு
அரசு மாற்று பணி வழங்கும் என காத்திருந்த பணியாளர் கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிராமங்களில் உள்ள பெண்களுக்கு எழதப்படிக்க கற்றுக்கொடுக்க வளர் கல்வி மையங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் 1999 ம் ஆண்டு துவக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் ஊராட்சி தலைமையிடங்களில் தலைமை மையங்களும், துணை மையங்கள் அமைக்கப்பட்டன. மாநிலத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளர்கல்வி மையங்களில் 28 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றினர். 5 ஆண்டுகளுக்கு துவக்கப்பட்ட இந்த திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த மையங்கள் ஊராட்சிகளுக்கு சொந்தமான அரசு கட்டடங்களில் இயங்கி வந்தது. இதில் தலைமை மைய பொறுப்பாளர்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாயும், துணை மையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாதம் 750 ரூபாயும் சம்பளமாக வழங்கப்பட்டுவந்தது.
பத்து வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வந்த வளர்கல்வி திட்டத்தை அரசு 30. 9.09 முதல் மூடப்பட்டு திட்டம் கைவிடப்பட்டது. இதனால் 15 ஆயிரம் வளர் கல்வி மையங்களில் பணியாற்றிய 28 ஆயிரம் பணியாளர்கள் வேலை வாய்ப்பு இழந்தனர். மூடப்பட்டுள்ள வளர் கல்வி மையங்களில் உள்ள புத்தகங்கள், மேஜை, நாற்காலிகள் உட்பட தளவாட பொருள்களை அருகில் உள்ள துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும்.ஒப்படைத்த பொருள்களுக்கு தலைமையா சிரியரிடம் சான்று பெற்று கலெக்டர்களிடம் ஒப்படைக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது வரை வேலை வாய்ப்பு இழந்த பணியாளர்கள் வளர்கல்வி மைய அலுவலகங்களில் உள்ள பொருள்கள் இருப்பதால் அரசு மாற்று திட்டங்கள் தந்து வேறு பணி வாய்ப்பினை உருவாக்கி தரும் என்ற நப்பாசையுடன் இருந்து வந்தனர். தற்போது பொருள்களை பள்ளியில் ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளதால் வேறு வாய்ப்பு இல்லை என்பதால் அதிர்ச்சியில் உள்ளனர். வளர்கல்வி பணியாளர்கள் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
அரசு கண்டு கொள்ளாததால் வளர்கல்வி பணியாளர் களின் விபரங்களை சங்கங்கள் சேகரிக்க தொடங்கியுள்ளன. அவர்கள் பணியாற்றிய பொறுப்பு, பணிக்காலம், படிப்பு விபரங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் வளர் கல்வி பணியாளர்கள் சங்கம் பெற்று வருகிறது. இதனை சேகரித்து அரசிடம் கோரிக்கை விடுக்க வளர் கல்வி பணியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
