தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலக தமிழ்ச்சங்க கட்டடம்: தமிழ் வளர்ச்சி செயலாளருக்கு நோட்டீஸ்

உலக தமிழ்ச்சங்க கட்டடம்: தமிழ் வளர்ச்சி செயலாளருக்கு நோட்டீஸ்

உலக தமிழ்ச்சங்க கட்டடம்: தமிழ் வளர்ச்சி செயலாளருக்கு நோட்டீஸ்


UPDATED : நவ 28, 2009 12:00 AM

ADDED : நவ 28, 2009 12:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2009 12:00 AM ADDED : நவ 28, 2009 12:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு


தமிழ்தாங்கி சங்க பொதுசெயலாளர் திரவியபாண்டியன் தாக்கல் செய்த பொது நல வழக்கு:
 
மதுரையில் 1982ல் உலக தமிழ் மாநாடு நடந்த போது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தமிழ் ஆர்வலர்கள் உலக தமிழ் சங்கத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போதைய அரசு சட்ட கல்லூரி அருகே 14.15 ஏக்கர் நிலத்தை இதற்காக ஒதுக்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்ததுடன் சரி. பிறகு பணி நடக்கவில்லை.
 
கட்டுமான பணிகளை விரைந்து மேற் கொள்ள 2007 மார்ச் 26ல் தமிழ் வளர்ச்சி துறை செயலாளர், தஞ்சை தமிழ் பல்கலை பதிவாளருக்கு மனு செய்தேன். அரசு முதற்கட்டமாக பத்து லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், காம்பவுண்ட் சுவர், மழை நீர் வடிகால் கட்ட 14.32 கோடி ரூபாய் மதிப்பீடு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
 
2000 டிச., 31ல் தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் தஞ்சை பல்கலை பதிவாளருக்கு ஒரு உத்தரவிட்டார். தமிழ்ச்சங்கம் கட்ட இருந்த இடத்தில் காம்பவுண்ட் சுவர் அமைக்கவும், கூட்டுறவு சங்க பதிவு சட்டப்படி அதை பதிவு செய்யவும், என்னென்ன விழாக்களை நடத்துவது என வரையறுக்கவும் அதில் கூறப் பட்டது. அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சங்கம் அமைந்தால் கல்வெட்டுகளை பாதுகாக்க முடியும்.
 
உலக தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைக்க முடியும். மீண்டும் மே27ல் முதல்வர், அனைத்து துறை அதிகாரிகளிடம் தமிழ் வளர்ச்சி துறை உத்தரவின் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நடவடிக்கை இல்லை. உலக தமிழ்ச்சங்க கட்ட உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஆர்.அழகுமணி, ஆர்.தனசேகரன் ஆஜராயினர்.
நீதிபதிகள் டி.முருகேசன், எஸ்.நாகமுத்து கொண்ட பெஞ்ச், இம்மனு குறித்து இரு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர், தஞ்சை பல்கலை பதிவாளருக்கு உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us