தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நூறு பள்ளிகளில் நூலகம்புத்தகம் வழங்குகிறது போலீஸ்

நூறு பள்ளிகளில் நூலகம்புத்தகம் வழங்குகிறது போலீஸ்

நூறு பள்ளிகளில் நூலகம்புத்தகம் வழங்குகிறது போலீஸ்


UPDATED : நவ 28, 2009 12:00 AM

ADDED : நவ 28, 2009 12:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2009 12:00 AM ADDED : நவ 28, 2009 12:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவர் நேற்று அளித்த பேட்டி:  நடப்பு ஆண்டில், வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த 450 மாணவ, மாணவியரின் கல்விச் செலவை மாநகர போலீஸ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏற்றுள்ளன; 41 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.


வரும் ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் 4,000 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த திட்டத் துக்கு உதவ தனியார் நிறுவனங்கள், வங்கிகள், தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.மாணவர்கள் கல்வியோடு,பொது அறிவு,  நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள, அதிகளவில் புத்தகம் படிக்க வண்டும். கோவையில் பெரும்பாலான பள்ளிகளில் நூலகம் இல்லை. இதனால் மாணவர்களிடையே படிக்கும் ஆர்வம் குறைந்துள்ளது.
 
இதை போக்கி, ஒவ்வொரு மாணவ,மாணவியும் அறிவுக் களஞ்சியமாக மாற வேண்டும். வாசிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, 100 பள்ளிகளில் நூலகம் அமைத்து தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக போலீஸ், பொதுமக்கள், கல்லூரி மற்றும் பல்கலைகளின் பங்கேற்புடன் ஒரு லட்சம் புத்தகங்கள் சேகரிக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் பள்ளிகளுக்கு தலா 1,000 புத்தகங்கள் வழங்கப்படும்.
 
முதல்கட்டமாக, போலீஸ் சார்பில் 5,000 புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வரும் டிச.,27ல் யுனஸ்கோ இயக்குனர் (கல்வி) ஆறுமுகம் பரசுராம் கோவை வருகிறார். அவர் முன்னிலையில் பள்ளி நூலகங்களுக்கான புத்தகங்கள் வழங்கப்படும். பள்ளி நூலகங்களுக்கு புத்தகம் வழங்க விரும்புவோர், அருகிலுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடம் ஒப்படைக்கலாம். இவ்வாறு, சிவனாண்டி தெரிவித்தார். பேட்டியின் போது, போலீஸ் துணைக்கமிஷனர் காமினி உடனிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us