தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/6-ம் வகுப்பில் இருந்தே கம்ப்யூட்டர் பாடம்!

6-ம் வகுப்பில் இருந்தே கம்ப்யூட்டர் பாடம்!

6-ம் வகுப்பில் இருந்தே கம்ப்யூட்டர் பாடம்!


UPDATED : நவ 28, 2009 12:00 AM

ADDED : நவ 28, 2009 12:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2009 12:00 AM ADDED : நவ 28, 2009 12:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆறாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் கல்வி, நூலக பாடவேளை, பொருளாதார பாடம், ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளில் அறிவியல் பாடத்துக்கு செய்முறை பயிற்சி போன்றவை அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கல்வி முறையில் பெரிய திருப்பம் ஏற்பட உள்ளது.

தமிழகத்தில் வரும் 2010 -11ம் கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என, முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். சமச்சீர் கல்விக்கான பொது பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பான அறிவிப்பை, கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

பொதுப் பாடத்திட்டம் தயாரிக்கும் பணியை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. சமச்சீர் கல்வியின் முதல்படியாக, பொது பாடத்திட்டம் தயாரிக்கும் பணியில், தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் குழு ஈடுபடுத்தப் பட்டது. இக்குழு தயாரித்த பொதுப் பாடத்திட்ட வரைவு, இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

பொதுப் பாடத்திட்ட வரைவு மீது மாநில, மாவட்ட மற்றும் வட்ட அளவில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, ஆலோசனைகள் பெறப்பட்டன. பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், துறை வல்லுனர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டது.

இப்புதிய பாடத் திட்டத்தில் ஆறு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி அறிமுகப் படுத்தப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு நூலக பாடவேளைகள் பள்ளி நடைமுறையில் இணைக்கப் பட்டுள்ளன. சமூக அறிவியல் பாடத்தில் முதன் முறையாக பொருளாதார பாடம் சேர்க்கப் பட்டுள்ளது. மேலும், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பிற்கு அறிவியல் பாடத்தில் செய்முறை பயிற்சி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த இறுதி செய்யப் பட்ட பொது பாடத் திட்டம் குறித்து, முதல்வர் கருணாநிதி நேற்று ஆய்வு செய்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வரிடம் இதுபற்றி விளக்கினார். பாடத்திட்டத்தை ஆய்வு செய்த முதல்வர், பாடப் புத்தகங்களை குறித்த நேரத்தில் தரமாகவும், பொலிவாகவும் மாணவர்களை ஈர்க்கும்வண்ணம் தயாரித்து தருமாறும், பொது பாடத்திட்டக் குழுவிற்கு ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியின் போது, நிதிஅமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, கனிமொழி எம்.பி., மாநில திட்டக் குழு துணைத் தலைவர் நாகநாதன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us