UPDATED : நவ 28, 2009 12:00 AM
ADDED : நவ 28, 2009 04:57 PM
அ நிறம் | அளவு
திருவள்ளூர் மாவட்டத்தில் 2006-07 மற்றும் 2007-08ம் ஆண்டுகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 218 நூலகங்கள் கட்டி முடிக்கப்பட் டுள்ளது. இவைகள் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.
இந்நூலகங்களின் பயன்பாட்டை மேம்படுத்தவும், ஊரக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், அடுத்த மாதம் ஊரக நூலக போட்டிகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இப்போட்டிகள் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி பிரிவிலும் நடத்தப்படும்.
அதேபோல், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் உயர், மேல் நிலைப்பள்ளி பிரிவிலும், இவ்விரு பிரிவுகளிலும் இடம் பெறாதவர்கள் இதர பிரிவிலும் என வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் நடத்தப்படும்.
இவர்களுக்கு நான்கு வகை போட்டிகள் பின்வருமாறு நடத்தப்படும். நூலகங் களில் உலக, இந்திய, தமிழக மற்றும் திரு வள்ளூர் மாவட்ட வரைபடங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 20 இடங்களை 5 நிமிடத்தில் கண்டறியும் போட்டி.
இத்திட்ட நூலகங்களில் 776 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றை பங்கேற்பாளர் 15 நிமிடங்களில் பார்வையிட்டு பின்னர் கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிக்கவேண்டும். அவ்வாறு அதிக சரியான பதில்களை அளிப்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.
குறிப்பிட்ட தலைப்பில் 5 நிமிடங்களுக்கு மிகாமல் பேசவேண்டும். இதற்கான தலைப்பு பின்னர் அறிவிக்கப்படும். நூலகங்களில் திருக்குறள், பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதை நூல்கள் இடம் பெற்றுள்ளன. அந்நூல்களில் இருந்து குறிப்பிட்ட பாடல்களை ஒப்புவிக்கும் போட்டியும் நடைபெறும். இதற்கான நேரம் 4 நிமிடங்கள்.
இப்போட்டிகள் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலக கட்டடத்தில் நடைபெறும். இதற்கான போட்டி நடைபெறும் நாள், நேரம் பின்னர் அறிவிக்கப்படும். இதில், பள்ளி மாணவ, மாணவியர், குழந்தைகள், ஊரக இளைஞர்கள், பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று பயன் அடையலாம். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
