தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போலீசுக்கு விண்ணப்பித்தவருக்கு மீண்டும் கண் பரிசோதனை!

போலீசுக்கு விண்ணப்பித்தவருக்கு மீண்டும் கண் பரிசோதனை!

போலீசுக்கு விண்ணப்பித்தவருக்கு மீண்டும் கண் பரிசோதனை!


UPDATED : டிச 14, 2009 12:00 AM

ADDED : டிச 14, 2009 09:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2009 12:00 AM ADDED : டிச 14, 2009 09:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரையை சேர்ந்த வெங்கடேஷ் மணிகண்டன் தாக்கல் செய்த ரிட் மனு: 2003-2004ம் ஆண்டுக்கான போலீஸ் கிரேடு 2 பதவி உயர்வுக்காக விண்ணப்பித்தேன். விளையாட்டு திறன் தேர்வில் வெற்றி பெற்றேன். அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ குழு முன்னிலையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. எனக்கு நிறக்குருடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தனியார் ஆஸ்பத்திரியில் கண்களை சோதித்ததில், அப்படி எந்த குறைபாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. சென்னை கண் பரிசோதனை ஆஸ்பத்திரியில் நடந்த சோதனையிலும் எனக்கு நிறக்குருடு பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனக்கு அப்படியொரு குறைபாடு கிடையாது. தனியார் ஆஸ்பத்திரிகளில் நடந்த சோதனைகளில் எனக்கு எந்த குறைபாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் கண் பரிசோதனை செய்ய தயாராக இருக்கிறேன். இதனால் எனக்கு போலீஸ் பணி வழங்க வேண்டும். ஆனால் என் தேர்வை ரத்து செய்து டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி கே.என்.பாஷா, மனுதாரர் மீண்டும் கண் பரிசோதனைக்கு உட்படுவதாக தெரிவித்துள்ளார். அவரை மீண்டும் ஆறு வாரங்களுக்குள் கண் பரிசோதனைக்கு அனுப்ப டி.ஜி.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கண் குறைபாடு இல்லை என தெரிய வந்தால் அவரை போலீஸ் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us