தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விழுப்புரம் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் தீவிரம்!

விழுப்புரம் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் தீவிரம்!

விழுப்புரம் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் தீவிரம்!


UPDATED : டிச 14, 2009 12:00 AM

ADDED : டிச 14, 2009 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2009 12:00 AM ADDED : டிச 14, 2009 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இருப்பினும், டில்லியில் உள்ள இந்திய மருத்துவக் கழகக் குழு, இறுதிக் கட்ட ஆய்வு செய்து, ஒப்புதல் வழங்கிய பிறகே கல்லூரி துவங்கும் நிலை உள்ளது.கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், விழுப்புரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி துவங்க அனுமதியளிக்கப்பட்டது.

கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்வதில், ஓராண்டிற்கு மேல் தாமதமானது. பின், விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் ஏரி பகுதியில், 45 ஏக்கர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் செலவில், மருத்துவக் கல்லூரி கட்ட, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.ஏரியில் மருத்துவக் கல்லூரி கட்ட, நீர் நிலை பாதுகாப்பு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கில், சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்ததால், கட்டுமானப் பணி துவங்கவில்லை. ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, கடந்தாண்டு டிசம்பர் 15ம் தேதி, பூமி பூஜையுடன் கட்டுமானப் பணி துவங்கியது.

நாமக்கல் பி.எஸ்.கே., கன்ஸ்ட்ரக்ஷன், திருச்சி எக்சலண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுனத்தினர் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.இரண்டு மாதங்களுக்கு முன், மத்திய அரசின் இந்திய மெடிக்கல் கவுன்சில் ஆய்வு செய்தது. கல்லூரியில் போதிய வசதிகள் இல்லாததால், வகுப்பு துவங்க அனுமதி வழங்கவில்லை. இதனால், வரும் 2010 - 11ம் கல்வியாண்டில், கல்லூரி துவங்க மாணவர்கள் சேர்க்கை நடக்கத் தேவையான அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், மார்ச் 6ம் தேதி விழுப்புரத்தில் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தை திறக்க வருகை தரும் முதல்வர் கருணாநிதி, அன்றே விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியைத் திறக்க பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியில், 43.24 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவமனை, 10.71 கோடி ரூபாய் மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு மற்றும் ரத்த வங்கியும், 58.70 கோடி ரூபாய் மதிப்பில் கல்லூரியும் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை, 17 மாதத்தில் முடிக்கும் வகையில் பணி நடந்து வருகிறது. பிப்ரவரி மாத இறுதியில், முதலாம் ஆண்டு படிப்பு துவங்கத் தேவையான அனைத்து பணிகளும் முடியும். மார்ச் 6ம் தேதி, முதல்வர் கருணாநிதி மருத்துவக் கல்லூரியை திறந்து வைப்பார் என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அதற்குள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் திறந்த பின், மாவட்ட மருத்துவமனை முண்டியம்பாக்கத்திற்கு இடமாற்றம் செய்து செயல்படத் துவங்கும்.

விழுப்புரம் அரசு மருத்துக் கல்லூரி டீன் ஜெயக்குமார் கூறியதாவது: மருத்துவமனை கட்டுமானப் பணி 80 சதவீதமும், கல்லூரி கட்டுமானப் பணி 60 சதவீதமும் முடிந்துள்ளது. பணிகளை முடித்து, பிப்ரவரி 10ம் தேதிக்குள் ஒப்படைத்தால் தான், மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை செய்து தர முடியும்.

டில்லியில் உள்ள இந்திய மருத்துவக் கழக குழு ஆய்வு செய்யும் போது, குறைந்தது 300 நோயாளிகளுக்கான படுக்கைகள் இருக்க வேண்டும். அப்போது தான், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒப்புதல் அளிப்பர். இறுதிக் கட்டமாக, மே மாதம் ஆய்வு செய்யும் போது 500 படுக் கைகள் இருக்க வேண்டும். அதன் பிறகே, மருத்துவக் கல்லூரி துவக்க முழு ஒப்புதல் கிடைக்கும்.இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படத் துவங்கினால், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைகளுக்கு செல்வது தவிர்க்கப்படும்.

இங்கு, 104 டாக்டர்கள் தினசரி பணியில் இருந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பர். மருத்துவக் கல்லூரிக்கு தேவையான அனைத்து வசதிகளும், திறப்பு விழாவிற்குள் செய்து முடிக்கும் நோக்கில் செயல்படுகிறோம்.இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us