தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பகத்தில் ஆவணங்கள் மாயம்: பி.எட்., பட்டதாரிகள் தவிப்பு

வேலைவாய்ப்பகத்தில் ஆவணங்கள் மாயம்: பி.எட்., பட்டதாரிகள் தவிப்பு

வேலைவாய்ப்பகத்தில் ஆவணங்கள் மாயம்: பி.எட்., பட்டதாரிகள் தவிப்பு


UPDATED : டிச 16, 2009 12:00 AM

ADDED : டிச 16, 2009 03:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2009 12:00 AM ADDED : டிச 16, 2009 03:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பதிவுதாரர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


பி.எட்.,பட்டதாரிகள் பதிவுசெய்து காத்திருப்போர் பட்டியலை இணையதளத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டது. இந்த பட்டியல் படி பதிவு மூப்பு விபரம் சரியாக உள்ளதா என ஆர்வத்துடன் இணையதளத்தை பார்த்த பட்டதாரிகளுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். மதுரை, விருதுநகர், சிவகங்கை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் பட்டதாரிகள் பதிவு விபரம் மாயமாகியுள்ளதை அறிந்தனர். இதில், பட்டதாரிகள் படித்த பாடங்களை வெளியிட்டதிலும் குழப்பம் நீடித்துள்ளது.


இதையடுத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விபரங்களை தெரிவிக்க குவிந்தனர். அங்கு சென்றவர்களிடம் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் மீண்டும் பதிவு செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 50 சதவீதம் பட்டதாரிகளின் பெயர்கள் விடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

மானாமதுரையை சேர்ந்த கோபாலன் கூறுகையில், கடந்த 1989 ல் பி.எட்., முடித்து பதிவு செய்தேன். பதிவு மூப்பு இருப்பதால் வேலைகிடைக்கும் சூழலில் ஆவணங்களை காணவில்லை என கூறுகின்றனர். மீண்டும் பதிவு செய்ய கூறுவதால் பழைய மூப்பு விபரங்கள் சரியாக குறிப்பிடப்படுமா என்ற குழப்பம் உள்ளது என்றார்.


வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அலுவலகத்தில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களே உள்ளனர். கம்ப்யூட்டரில் பதிவு செய்வதால் குழப்பம் நிலவுகிறது. பதிவு விடுபட்டோர் மீண்டும் பதியலாம் . இதற்கு கால அவகாசம் தெரிவிக்கவில்லை என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us