தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அதிகாரிகள் திறனை மேம்படுத்த நிர்வாக பணியாளர் கல்லூரி

அதிகாரிகள் திறனை மேம்படுத்த நிர்வாக பணியாளர் கல்லூரி

அதிகாரிகள் திறனை மேம்படுத்த நிர்வாக பணியாளர் கல்லூரி


UPDATED : டிச 20, 2009 12:00 AM

ADDED : டிச 20, 2009 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2009 12:00 AM ADDED : டிச 20, 2009 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் கூறியதாவது: வெளிநாடுகளின் உள்ள இப்பல்கலையின் முன்னாள் மாணவர்களிடம் நிதி திரட்டி, ரூ.10 கோடி செலவில் இங்கு நவீன அரங்கு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அனைத்து கல்லூரிகளிலும் இனி யு.ஜி.சி., பரிந்துரைப்படி அமைக்கப்பட்ட தேர்வுக்குழு நியமனம் செய்யும் ஆசிரியர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும். இது ஐகோர்ட் உத்தரவுப்படி முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அங்கீகாரம் பெறும் ஆசிரியர்கள் மட்டுமே இனி கல்விப்பேரவை தேர்தலில் போட்டியிடவோ, ஓட்டளிக்கவோ முடியும்.
அலுவலர்கள் பதவி உயர்வுக்கான பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டது. திறந்தவெளி முறையில் பட்டம் பெற்றவர்கள், பிளஸ் 2 முடித்து இருந்தால் அப்பட்டம் செல்லும். அதே போல பட்டப்படிப்பு முடித்து திறந்த வெளிமுறையில் பட்டமேற்படிப்பு பெற்றிருந்தால் செல்லும். இதை விடுத்து நேரடியாக திறந்த வெளிமுறையில் எம்.ஏ., எம்.காம்., போன்ற பட்டமேற்படிப்புகளை படித்து பதவி உயர்வு கோரமுடியாது.

ஓய்வு பெற்ற பல்கலை ஆசிரியர்களுக்கு இனி பணிநீடிப்பும் கிடையாது. அலுவலர் நியமனங்கள் இனி வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் எண்கள் பெற்று நிரப்பப்படும். இவர்களுக்கும், ஏற்கனவே தற்காலிக, தொகுப்பூதியம் பெறும் அலுவலர்களுக்கும் தேர்வு நடத்தி, இடஒதுக்கீடு முறையில் நியமிக்கப்படுவர்.

காலியாக உள்ள தேர்வாணையர், அகடமிக் ஸ்டாப் கல்லூரி இயக்குனர், கல்வி ஒளிபரப்புமைய டைரக்டர் பதவிகளுக்கு விளம்பரம் செய்து, நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் கணேசன், சிண்டிகேட் உறுப்பினர்கள் பெருமாள், ஆதப்பன், மோகன், குமரகுரு, சுப்பையா, சரஸ்வதி ஆகியோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us