தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜராவதம் மகாதேவனுக்கு தமிழ் பல்கலை முதுமுனைவர் பட்டம்

ஜராவதம் மகாதேவனுக்கு தமிழ் பல்கலை முதுமுனைவர் பட்டம்

ஜராவதம் மகாதேவனுக்கு தமிழ் பல்கலை முதுமுனைவர் பட்டம்


UPDATED : டிச 22, 2009 12:00 AM

ADDED : டிச 22, 2009 01:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2009 12:00 AM ADDED : டிச 22, 2009 01:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு


தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் ஐந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா நடந்தது.  பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன் வரவேற்றார். எழுத்தாளர் ஜெயகாந்தன், தொல்லெழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், இசையியல் அறிஞர் ராமதிலகம் ஆகியோருக்கு முதுமுனைவர் பட்டத்தையும், 176 பேருக்கு முனைவர் பட்டம், 914 பேருக்கு ஆய்வியல் நிறைஞர் பட்டம், 528 பேருக்கு முதுநிலை பட்டம், 101 பேருக்கு இளங்கலைப் பட்டங்களை, தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வழங்கினார்.


விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் இணைவேந்தர் பொன்முடி பேசியதாவது:
 
தமிழக வரலாற்றை எழுத சங்க இலக்கியம் உதவியது என்பதை மறுக்க முடியாது. சங்க இலக்கியத்தை புதுப்பிக்க, பொருள் உணர அரிய கல்வெட்டுக்கள் உதவின. தமிழ்நாடு, தமிழ் வரலாற்றை இன்னும் வெளிக் கொண்டு வர வேண்டும். இதை தமிழ் பல்கலை செயல்படுத்த வேண்டும். தமிழ் சேவை இன்னும் வளர வேண்டும் என்பதற்காகத்தான் செம்மொழி மாநாட்டுப் பணியை, தமிழ் பல்கலைக்கு முதல்வர் வழங்கியுள்ளார். இம்மாநாட்டின் ஆய்வரங்கம் மூலம், வளரும் தமிழுக்கு ஆக்கமும், ஊக்கமும் தர வேண்டும்.

முனைவர் பட்டம் பெற்றவர்கள் தமிழ் ஆராய்ச்சிக்கு உதவ வேண்டும். தாய் மொழியில் படித்தால்தான் நம்மால் எதையும் உணர, புரிந்து கொள்ள முடியும். தாய்மொழியில் படிக்கும்போதுதான் ஆராய்ச்சிகள் கூட வளரும். அதற்காக ஆங்கிலம் வேண்டாம் என்று கூறவில்லை. இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில், முதுமுனைவர் பட்டம் பெற்ற, தொல்லெழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் கூறுகையில், பத்மஸ்ரீ விருது பெற்றதைவிட, தமிழ் பல்கலையில் முதுமுனைவர் பட்டம் பெற்றதை, பல மடங்கு சிறப்பு பெற்றதாக கருதுகிறேன். 50 ஆண்டு காலமாக, தொல்லியல் துறையில் பணி செய்துள்ளேன். இதற்கு, தமிழ் பல்கலை பட்டம் வழங்கியது மேலும் பெருமை சேர்த்துள்ளது என்றார்.

ராமதிலகம் கூறுகையில், இசைத்துறையில் 40, 50 ஆண்டுக்கு மேலாக ஆர்வம் காட்டி வருகிறேன். எனக்கு 87 வயதாகிறது. இப்போது தமிழ் பல்கலை எனக்கு விருது வழங்கியுள்ளது என்பது எனது விடா முயற்சிக்கு கிடைத்தது. இசைக்கலை சிறப்பாக வளர வேண்டும். எனக்கு கிடைத்துள்ள விருதுக்காக தமிழக முதல்வர், துணைவேந்தர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us