கிராமியக் கலைப் படிப்புகளுக்காக தனிப்பல்கலை உருவாகிறது
கிராமியக் கலைப் படிப்புகளுக்காக தனிப்பல்கலை உருவாகிறது
UPDATED : டிச 26, 2009 12:00 AM
ADDED : டிச 26, 2009 04:31 PM
இதுகுறித்து கிராமியக் கலை நிபுணர்களுடன் கர்நாடக அரசின் உயர்கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில், அரசின் இந்த முயற்சிக்கு முழுமையான ஆதரவு கிடைத்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியைப் பெறுவதற்கு பதிலாக மாநில அரசு நிதியிலிருந்தே இப்பல்கலைக்கழகத்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவி அளித்தாலும் அல்லது அளிக்காவிட்டாலும் ஜனபாட பல்கலைக்கழகத்தை கர்நாடக அரசு உருவாக்கும் என்று உயர்கலவித்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவலி தெரிவித்தார். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தனி அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
கிராமியக் கலையை உயர்நிலைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கவும் கல்வித்துறை முயற்சி செய்து வருகிறது என்று கிராமியக் கலை ஆர்வலரான ஜி. நாராயணா தெரிவித்துள்ளார்.
