தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மனிதன் வாழ தகுந்த மற்றொரு கிரகம்? விஞ்ஞானிகள் ஆய்வு

மனிதன் வாழ தகுந்த மற்றொரு கிரகம்? விஞ்ஞானிகள் ஆய்வு

மனிதன் வாழ தகுந்த மற்றொரு கிரகம்? விஞ்ஞானிகள் ஆய்வு


UPDATED : டிச 26, 2009 12:00 AM

ADDED : டிச 26, 2009 04:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 26, 2009 12:00 AM ADDED : டிச 26, 2009 04:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மும்பை: மனிதன் வாழ்வதற்கு ஏற்ற பூமியைப் போன்ற மற்றொரு கிரகம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.


ஹார்வர்டு ஸ்மித் - சோனியன் வானியற்பியல் மையத்தைச் சேர்ந்த லிசா கல்ட்டெனகர் என்ற பெண்மணி, ‘ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்’  என்ற கருவியின் மூலம் சூரியக் குடும்பத்துக்கு உள்ளேயே பூமியைப் போல அமைப்புடைய ஏதாவது ஒரு கிரகம் இருக்காதா என்று ஆராய்ந்து வருகிறார்.


‘நமது சூரியக் குடும்பத்துக்குள் வியாழன் கிரகம் போன்ற அளவில் பெரிய பெரிய வாயு கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவற்றின் அருகில் பல நட்சத்திரங்களும் இருக்கின்றன. இந்த வாயு கிரகங்களில் நாம் வாழ முடியாது. ‘ஆனால் இவற்றைச் சுற்றி வரும் நட்சத்திரங்கள், பெரும்பாலும் பாறைகள், பனி மூட்டங்கள் இவற்றோடுதான் இருக்கின்றன. இவை, நாம் வாழ்வதற்குத் தகுதியான கிரகங்கள் மேலும் சில இருக்கின்றன என்பதைத்தான் காட்டுகின்றன’ என்கிறார் லிசா.


இப்போது அவர் இதுபோன்ற மனிதன் வாழத் தகுந்த கிரகமான, ‘ஆல்பா சென்டவுரி ஏ’ என்பதைக் கண்டுபிடித்துள்ளார். ‘நமது சூரியன் போல உள்ள ஒரு நட்சத்திரத்தின் அருகில் ஆல்பா கிரகம் இருக்கிறது. ‘அவதார்’ என்ற ஹாலிவுட் படத்தில் வரும், ‘பண்டோரா’ போலத்தான் அது இருக்கிறது. அதில் நமக்குத் தேவையான கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன், நீர் போன்றவை இருக்கிறதா என்று ஆராய்ச்சி நடந்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us