தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமிக்க தலைமையாசிரியர்கள் வேண்டுகோள்

மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமிக்க தலைமையாசிரியர்கள் வேண்டுகோள்

மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமிக்க தலைமையாசிரியர்கள் வேண்டுகோள்


UPDATED : டிச 28, 2009 12:00 AM

ADDED : டிச 28, 2009 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 28, 2009 12:00 AM ADDED : டிச 28, 2009 10:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரையில் இச்சங்க கூட்டம் மாநில தலைவர் செல்வம் தலைமையில் நடந்தது.  மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி வரவேற்றார். பொது செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் பாலகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் சிவமூர்த்தி, புரவலர்கள் ராஜூ, அருள்சுந்தரராஜன், நடனகுருநாதன், பரமசிவம், மாவட்ட கல்வி அலுவலர் பூலோகசுந்தர விஜயன், மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கர், தங்கவேலு, கோவிந்தராஜ், செல்வராஜ், ரேணுகா மற்றும் பலர் கலந்து கொண்டனர். உசிலம்பட்டி கல்வி மாவட்ட செயலாளர் முத்தையா நன்றி கூறினார்.

மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷ அபியான் திட்டத்தில் ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் அனுபவம் பெற்ற உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை தேவைக்கு ஏற்ப உருவாக்க வேண்டும். கற்றல், கற்பித்தல் பணி சிறப்பாக நடக்க பள்ளிக்கு தேவையான ஆசிரியர்,  அலுவலக பணியாளர்களை நிரப்ப வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக நிதி, கொடி வசூல், வினாத்தாள் கட்டணம், ஆங்கில வழி கற்பிப்பு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்து இந்நிதியை அரசு வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us