UPDATED : ஜன 09, 2010 12:00 AM
ADDED : ஜன 09, 2010 04:00 PM
அ நிறம் | அளவு
மருத்துவ, தொழில்நுட்ப, நிர்வாகத் துறை மாணவர்களுக்கு தொழில் மற்றும் ஆய்வு நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படுவதைப் போல கலை, அறிவியல், கல்வியியல், வணிகவியல், சட்டம் போன்ற மற்ற பாடப்பிரிவு மாணவர்களுக்கும் இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் தொழில் நிறுவனங்கள், தொழில் அமைப்புகள், சார்ட்டர்ட் அக்கவுன்டன்சி நிறுவனங்களிலும் ஆய்வு நிறுவனங்களும் மாணவர்கள் பயிற்சி பெறலாம்.
வரும் மார்ச் முதல் இந்த இன்டர்ன்ஷிப் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்தப் பயிற்சியில் சேரத் தகுதி படைத்த மாணவர்களை இதற்காக தேர்வுக் குழு தேர்வு செய்யும். பயிற்சியில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு நேர்முகப் பயிற்சி அளிக்கப்படும்.
