UPDATED : ஆக 12, 2023 12:00 AM
ADDED : ஆக 12, 2023 04:07 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) பொறுப்பேற்று, 3 மாதம் கூட நிறைவு பெறாத நிலையில், கோவைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த பாலமுரளி, கடந்த, மே 15ல், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்று, மூன்று மாதம் கூட முழுமை பெறாத நிலையில், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த உஷா, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்க உள்ளார். அதேபோல், ராமநாதபுரம், சிவகங்கை, மயிலாடுதுறை, கோவை, ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலர்களும், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
