தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருச்சியில் வெளிநாட்டு வேலைக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம்

திருச்சியில் வெளிநாட்டு வேலைக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம்

திருச்சியில் வெளிநாட்டு வேலைக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம்


UPDATED : ஜன 16, 2010 12:00 AM

ADDED : ஜன 16, 2010 10:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 16, 2010 12:00 AM ADDED : ஜன 16, 2010 10:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 தமிழக அரசு நிறுவனமானஅயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்தவர்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். கடந்த 13 ஆண்டுகளில் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை ஆயிரக்கணக்கானோரை பணியமர்த்தி உள்ளது.

வெளிநாட்டு வேலையளிப்போரிடமிருந்து பணியாளர்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாலும், சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்வதால் பயண நேரம், செலவை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டு வேலைவாய்ப்பு பதிவிற்கான சிறப்பு முகாம்கள் திருச்சி மற்றும் சேலத்தில் நடக்க உள்ளன.திருச்சி, நாலு ரோடு, மன்னார்புரத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜனவரி 23, 24 தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், ஜனவரி 30, 31ல் சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு முகாம் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போட் ஆகியவற்றின் மூன்று நகல்கள் மற்றும் நான்கு புகைப்படத்துடன் பங்கேற்க வேண்டும். அனுவம், பாஸ்போட் இல்லாதவர்களும், கல்வி அல்லாத தொழில் அனுபவம் உள்ளவர்களும் பங்கேற்கலாம். பதிவு கட்டணம் வேலைகளுக்கு ஏற்ப 442 ரூபாய் முதல் 995 வரை செலுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us