தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாசிக்க திணறும் தமிழக மாணவர்கள்!

வாசிக்க திணறும் தமிழக மாணவர்கள்!

வாசிக்க திணறும் தமிழக மாணவர்கள்!


UPDATED : ஜன 16, 2010 12:00 AM

ADDED : ஜன 16, 2010 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 16, 2010 12:00 AM ADDED : ஜன 16, 2010 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துவக்க பள்ளிகளில் செயல் வழி கற்றல் (ஏ.எல்.எம்.,), படைப்பாற்றல் கல்வி (ஏ.பி.எல்.,) முறையில் கல்வி போதிக்கப்படுகிறது. துவக்க கல்விக்காக மத்திய அரசு பணத்தை கோடிக்கணக்கில் கொட்டுகிறது. ஆனால், கல்வித்தரம் உயர்ந்துள்ளதா என்றால், தமிழகத்தை பொறுத்தவரை இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்திய கல்வி வளர்ச்சி கழகம், 2005 முதல் நாடு தழுவிய அளவில், கல்வி நிலை ஆண்டறிக்கை (ஏ.எஸ்.இ.ஆர்.,-அசர்) என்ற ஆய்வை நடத்துகிறது. தமிழகத்தில் கல்வி என்ற தன்னார்வ கூட்டமைப்பு ஆய்வை நடத்தியது. இதில், தமிழகம் கற்றல் திறனில் பின்தங்கி இருப்பதாக, பகீர் தகவல் வெளியாகியுள்ளது.2008 ல் தமிழகம் பின்தங்கி இருப்பதும்; கடந்த மூன்று ஆண்டுகளில் கற்றல் திறனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து, இந்திய கல்வி வளர்ச்சி கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆறு முதல் 14 வயது வரை உள்ள கிராமப்பள்ளி மாணவர்களிடம், அடிப்படை திறன் (வாசிப்பு, எளிய கணிதம்) குறித்து ஆய்வு நடத்தினோம்.

* இரண்டாம் வகுப்பு குழந்தைகள், பாடத்தில் உள்ளசிறிய கதைகளை வாசிப்பது அடிப்படை திறன் ஆகும். ஆனால், ஐந்தாம் வகுப்பில் படிக்கும் 72 சதவீத மாணவர்களால், இரண்டாம் வகுப்பில் உள்ள சிறிய கதைகளை கூட வாசிக்க முடியவில்லை.

* இரண்டாம் வகுப்பு குழந்தைகள், எளிய கழித்தல் கணக்குகளை செய்ய வேண்டும். ஆனால், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 64 சதவீதத்தினருக்கு இது தெரியவில்லை.

* நாட்டின் ஒட்டுமொத்த கல்வி நிலையோடு ஒப்பிடுகையில், தமிழகத்தின் கற்றல் திறன் மிகவும் பின்தங்கியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வாசித்தல் திறன்- 66.6 சதவீதம், கணிதத்திறன்- 54.9 சதவீதம். ஆனால், தமிழகம், முறையே 45.7; 36.9 சதவீதம் என்ற நிலையில் தான் உள்ளது.

* 2006 முதல் 2008 வரை ஒப்பீட்டில், கற்றல் திறனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

வாசிப்பு திறன் (சதவீதம்):

2006- 46.4, 2007-49.2, 2008- 45.7.

கணிதத்திறன் (சதவீதம்):

2006- 53, 2007- 43, 2008- 36.3.

* மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, சண்டிகர், இமாச்சல், உத்தரகாண்ட், சிக்கிம், நாகலாந்து மாநிலங்களில் 85 சதவீததத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வாசிப்பு திறன் பெற்றுள்ளனர்.

* மத்திய பிரதேசம், சண்டிகார், இமாச்சல், கேரளா, மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், சிக்கிம், நாகலாந்து, ஆந்திரா, மேகாலயா, மணிப்பூர், பீகார், அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் 85 சதவீததத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கணித்திறன் பெற்றுள்ளனர்.இவ்வாறு அதிகாரி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us