ஜிப்மரில் பட்ட மேற்படிப்பு இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை
ஜிப்மரில் பட்ட மேற்படிப்பு இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை
UPDATED : ஜன 18, 2010 12:00 AM
ADDED : ஜன 18, 2010 09:05 AM
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு நிறுவனமான ஜிப்மரில் எம்.டி., எம்.எஸ்., ஆகிய பட்ட மேற்படிப்புகளுக்கு 90 சீட்டுகள் உள்ளன. இதில் பொதுப் பிரிவுக்கு 35 சீட்டுகளும், ஓ.பி.சி., க்கு 14, எஸ்.சி.க்கு 13, எஸ்.டி.க்கு 6, ஊனமுற்றோருக்கு 2ம் மீதமுள்ள 20 சீட்டுகள் ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல் லூரியில் எம்.பி.பி.எஸ்., முடித்த புதுச்சேரி மாணவர்களுக்கு எந்த ஒதுக்கீடும் இல்லை. இந்த தனியார் மருத்துவ கல்லூரியில் பயின்ற மாணவர்கள் அனைவரும் மற்ற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களோடு தான் தேர்வு எழுதி அகில இந்திய அளவில் பிரிவு வாரி யாக ஒதுக்கப்பட்டுள்ள 60 சீட்டுகளில் எம்.டி., எம்.எஸ்., ஆகிய பட்ட மேற்படிப்புக்கு சேர வேண்டியுள்ளது.
கடந்தாண்டு புதுச்சேரி மாணவர்கள் யாரும் சேர இயலாத நிலை ஏற் பட்டது. எனவே, இந்தக் கல்வியாண்டு முதல் புதுச்சேரி மாணவர்களுக்கு எம்.டி., எம்.எஸ்., பட்ட மேற்படிப் பில் தனி இட ஒதுக்கீடு வழங்க மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, முதல்வர் வைத்திலிங்கம், கண்ணன் எம்.பி., ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
