தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10, பிளஸ் 2 தேர்ச்சிக்கு 95 சதவீத இலக்கு! பள்ளி ஆசிரியர்கள் பிஸி

10, பிளஸ் 2 தேர்ச்சிக்கு 95 சதவீத இலக்கு! பள்ளி ஆசிரியர்கள் பிஸி

10, பிளஸ் 2 தேர்ச்சிக்கு 95 சதவீத இலக்கு! பள்ளி ஆசிரியர்கள் பிஸி


UPDATED : ஜன 18, 2010 12:00 AM

ADDED : ஜன 18, 2010 09:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2010 12:00 AM ADDED : ஜன 18, 2010 09:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேர்ச்சி சதவீதம் குறைந்தால் விளக்கம் கேட்கப்படும் என்பதால், கூடுதல் அக்கறையுடன் பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

தமிழகம் முழுவதும் வரும் மார்ச்சில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.  இத்தேர்வில், கடந்த ஆண்டுகளை விட அதிக தேர்ச்சி சதவீதம் பெறுவதற்கான திட்டங்கள், மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்பு நடத்துவது; படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை அளிப்பது; கடந்த பொது தேர்வில் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்துவது, உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இது போன்ற திட்டங்கள் கட்டாயம் பலன் அளிக்கும் என்பதால், மாவட்டத்தில் இந்த ஆண்டு 95 சதவீத தேர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008-2009ல் பிளஸ் 2 பொது தேர்வில் 87.44 சதவீதமும், பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 80.88 சதவீத தேர்ச்சியையும் கோவை மாவட்டம் பெற்றிருந்தது. தொடர் பயிற்சிகளால் இந்த ஆண்டு அதிக தேர்ச்சி விகிதம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இது பற்றி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(சி.இ.ஓ.,) ஆனந்தி கூறியதாவது: இந்த ஆண்டில் நடக்கவுள்ள பொதுத்தேர்வுகளில் மாணவ, மாணவியர் அதிக தேர்ச்சி சதவீதம் பெற சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், கடந்த காலாண்டு தேர்வை விட, அரையாண்டு தேர்வில் 25 சதவீதம் தேர்ச்சி உயர்ந்துள்ளது. ஆகவே, பொதுத் தேர்வில் 95 சதவீத தேர்ச்சி என்ற இலக்கு நிர்ணயித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பாடத்திலும் அவர்களை எப்படியும் குறைந்தது 35 சதவீத மதிப்பெண் பெற வைக்க, சிறப்பு பயிற்சிகள் உதவும். தேர்வு நேரத்தில் வகுப்புக்கு வராத மாணவர்களும் தேர்ச்சி சதவீதம் குறைய காரணம் என்பதால், மாணவர்கள் ஆப்சென்ட் ஆகாமல் தடுப்பற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், அரையாண்டு தேர்வுக்குப் பின் வகுப்புக்கு  ஆப்சென்ட் ஆகும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நடப்பு ஆண்டில் 95 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய அனைத்து ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் நன்கு ஒத்துழைப்பதால், இலக்கு நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு, ஆனந்தி கூறினார்.

தேர்ச்சி சதவீதம் குறையும் பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என்பதால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவ, மாணவியரின் தேர்ச்சி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us