அர்ஜுன் சிங்கால் ஏற்பட்டது மத்திய அரசுமீது பா.ஜ., புகார்
அர்ஜுன் சிங்கால் ஏற்பட்டது மத்திய அரசுமீது பா.ஜ., புகார்
UPDATED : ஜன 20, 2010 12:00 AM
ADDED : ஜன 20, 2010 11:55 AM
அ நிறம் | அளவு
கண்மூடித்தனமாக, ஏராளமான கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலை அந்தஸ்து வழங்கியதே, இப்போதைய பெருங் குழப்பத்திற்கு காரணம் என, பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக பா.ஜ., கட்சியின் தகவல் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
போதிய அளவு உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்வி நிறுவனங்களுக்கு, நிகர்நிலைப் பல்கலைக் கழக அந்தஸ்து வழங்க, முந்தைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங்தான் அனுமதி வழங்கினார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான், இது நடைபெற்றது.
இப்படி அனுமதி வழங்கியது ஏன் என்பது குறித்து, கல்வியாளர் மற்றும் பொருளாதார நிபுணரான பிரதமர் மன்மோகன் சிங், பொதுமக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும். நாட்டில் உள்ள 126 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில், 38 கல்வி நிறுவனங்கள் மட்டுமே நிகர்நிலைப் பல்கலைக் கழக அந்தஸ்து பெற தகுதி உடையதாக உள்ளதாக, இது தொடர்பாக ஆய்வு நடத்திய மத்தியக் குழு தெரிவித்துள்ளது.
உயர் கல்வி விஷயத்தில், மத்திய அரசு விட்டுக் கொடுத்துள்ளது, இந்த விவகாரம் மூலம் தெரியவந்துள்ளது. இதன்மூலம், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
