தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டண நிர்ணயம்: உத்தரவு தள்ளிவைப்பு

தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டண நிர்ணயம்: உத்தரவு தள்ளிவைப்பு

தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டண நிர்ணயம்: உத்தரவு தள்ளிவைப்பு


UPDATED : ஜன 20, 2010 12:00 AM

ADDED : ஜன 20, 2010 11:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2010 12:00 AM ADDED : ஜன 20, 2010 11:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இம்மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.


கரூர் மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு: பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குமுறைப்படுத்த சட்டம் ஒன்றை கடந்த ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தில், தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கட்டணம் நிர்ணயம் செய்ய, பல்வேறு அம்சங்கள் பரிசீலிக்கப்பட உள்ளன.


கமிட்டி நிர்ணயிக்கும் கட்டணத்தை மூன்று ஆண்டுகள் வரை வசூலிக்கலாம். அதன்பின், அதில் மாற்றம் செய்ய பள்ளிகள் தரப்பில் முறையிடலாம். அரசு பிறப்பித்த சட்டத்தின்படி, கட்டண நிர்ணய உரிமையை பள்ளிகளிடம் இருந்து அரசு எடுத்துக் கொண்டுள்ளது. இந்தச் சட்டப்பிரிவுகள், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளை மீறுவதாக உள்ளது. அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களின் கட்டண நிர்ணய உரிமையை பறிப்பது என்பது, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முரணாக உள்ளது. எனவே, தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தில் உள்ள சில பிரிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, நான்கு மனுக்கள் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள் அனைத்தும் நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், சீனியர் வக்கீல்கள் என்.ஆர்.சந்திரன், கே.துரைசாமி, முத்துகுமாரசாமி, வெங்கடாச்சலபதி, சிலம்பண்ணன் ஆஜராகினர். தமிழக அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க கோரினர். தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், சிறப்பு அரசு பிளீடர் சங்கரன், ஏற்கெனவே இதுபோன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவுக்கு அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. ஐகோர்ட் தடை விதிக்கவில்லை. எனவே, தடை உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என வாதாடினர். இதையடுத்து, தடை கோரிய மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் நீதிபதி சிவஞானம் தள்ளிவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us