தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீலகிரியில் அனுமதி மீறி கல்லூரி கட்டடம்?

நீலகிரியில் அனுமதி மீறி கல்லூரி கட்டடம்?

நீலகிரியில் அனுமதி மீறி கல்லூரி கட்டடம்?


UPDATED : ஜன 20, 2010 12:00 AM

ADDED : ஜன 20, 2010 12:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2010 12:00 AM ADDED : ஜன 20, 2010 12:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 


பசுமை மிகுந்த ஊட்டி நகரம், பெருகி வரும் கட்டடங்களால், கான்கிரீட் காடாக மாறி வருகிறது. இந்நிலையில், தொட்டபெட்டா ஊராட்சியில், தற்போது, பிரம்மாண்டமான&' கட்டடங்கள் எழுந்து வருவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. தொட்டபெட்டா ஊராட்சிக்கு உட்பட்ட அத்திக்கல் கிராமத்தை ஒட்டி, பெங்களூருவில் வசிக்கும் தொழில் அதிபருக்கு சொந்தமான இடத்தில், மிகப் பிரம்மாண்டமான கட்டடம் எழுந்து வருகிறது.


இந்த கட்டடம் கட்டுவதற்காக, ஒரு மலையே குடையப்பட்டுள்ளது. இந்த மலையை இரண்டாக பிளந்து, கட்டடத்துக்கு செல்ல ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. கட்டடம் கட்டுவதற்காக, ஊராட்சியில் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், கட்டடத்துக்கு அனுமதி பெற்று இப்பகுதியில் ரிசார்டுகள் கட்டும் பணி ஜரூராக நடந்து வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 250 சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டடம் கட்ட மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான ஊராட்சிகளில், இந்த உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டு ஆயிரம் சதுர அடிக்கும் மேற்பட்ட, பிரம்மாண்ட கட்டடங்கள் புற்றீசல் போல் பெருகி வருகிறது. தொட்டபெட்டா ஊராட்சிக்கு உட்பட்ட ஆடாசோலை பகுதியில், தனியார் கல்லூரியின் கட்டுமானப் பணிகள், ஜரூராக நடந்து வருகிறது.


இப்பகுதியில், ஊராட்சி விதிமுறைகளுக்கு மாறாக, ஆயிரம் மீட்டருக்கு அதிகமாக, விவசாய நிலத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. விவசாய நிலங்களில் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெறப்பட்டு, வணிக ரீதியான கட்டுமானப் பணிகள் நடந்து வருவதாக, குற்றம் சாட்டப்படுகிறது. இத்தகைய கட்டுமானங்களால், ஊட்டியை சுற்றியுள்ள பகுதிகளும் கான்கிரீட் காடுகளாக மாறி வருவது, நீலகிரியின் இயற்கை வளத்தை குறைத்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us