தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டப்படிப்பு வேலையை பெற்றுத்தராது: கலெக்டர் அறிவுரை

பட்டப்படிப்பு வேலையை பெற்றுத்தராது: கலெக்டர் அறிவுரை

பட்டப்படிப்பு வேலையை பெற்றுத்தராது: கலெக்டர் அறிவுரை


UPDATED : ஜன 23, 2010 12:00 AM

ADDED : ஜன 23, 2010 12:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2010 12:00 AM ADDED : ஜன 23, 2010 12:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு


திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு வழிகாட்டும் மையம் மற்றும் எம்.ஐ.இ.டி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் தொழிற் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் குண்டூரிலுள்ள எம்.ஐ.இ.டி., கல்லூரியில் நடந்தது. கல்விக்குழும தாளாளர் முகமதுயூனுஸ் தலைமையில் வகித்தார். உதவி இயக்குனர் முரளிதரன் வரவேற்றார்.


தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சியை திறந்து வைத்தும், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் சவுண்டையா வழங்கி பேசியதாவது: கல்லூரிகளில் படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு வழங்கும் அறிவுரைகள் எதையும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பார்கள்.

ஆனால் கல்லூரிப்படிப்பு முடிந்த பின் ஒவ்வொருவராக தேடிச் சென்று அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் கேட்கின்றனர். அதனால் தான் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை ஒன்று திரட்டி படித்தபின் வேலைவாய்ப்புகள் பெற தங்களை எவ்வாறு தயார் செய்து கொள்ள வேண்டும் என்று துறை வல்லுநர்களால் கருத்துரைகள் வழங்கப்படுகிறது.தற்போது இருப்பது போன்று 20 அல்லது 30 ஆண்டுக்கு முன் அதிக எண்ணிக்கையில் இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் இல்லை. ஆனால் தற்போது அதிக எண்ணிக்கையில் இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. பட்டப்படிப்பு என்பது வேலையை பெற்று தருவதற்கு ஒரு தகுதியும், அடையாளமுமே தவிர பட்டப்படிப்பு மட்டும் வேலையை பெற்று தராது. இன்ஜினியரிங் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் இன்று குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.


படித்து முடிக்கின்ற அனைவரும் அரசு வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்று எண்ணியுள்ளனர். அனைவருக்கும் அரசால் வேலை வழங்க இயலாது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டால் தான் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற முடியும். நடப்பாண்டு திருச்சி மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக் கடனாக 37 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் படிக்க போதிய வசதிகள் இல்லை. போட்டி தேர்வுக்கு பங்கேற்று வழிகாட்டும் மையங்களோ, அதிக அளவில் நூல்களோ இல்லை.வேலை வாய்ப்புகளுக்கு அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.


மண்டல துணை இயக்குனர் சுரேஷ்குமார், உதவி-இயக்குனர் முருகேசன், டிடிட்சியா துணைத்தலைவர் கனகசபாபதி, பல்கலைக்கழக மகளிரியல் துறைத்தலைவர் மணிமேகலை, இளைஞர் மேம்பாடு மற்றும் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் அய்யம்பிள்ளை உட்பட தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இளைநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன் உட்பட அதிகாரிகள், பேராசிரியர்கள் செய்திருந்தனர். பேராசிரியர் அங்கமுத்து நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us