தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாடத் திட்டத்தை மாற்றினால் தான் கல்வியில் தன்னிறைவு: துணைவேந்தர்

பாடத் திட்டத்தை மாற்றினால் தான் கல்வியில் தன்னிறைவு: துணைவேந்தர்

பாடத் திட்டத்தை மாற்றினால் தான் கல்வியில் தன்னிறைவு: துணைவேந்தர்


UPDATED : ஜன 24, 2010 12:00 AM

ADDED : ஜன 24, 2010 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2010 12:00 AM ADDED : ஜன 24, 2010 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய வர்த்தகத் துறை தொழில் கூட்டமைப்பு சார்பில், மாணவர்களின் தொழில் துறைக்கான நுழைவாயில் என்ற தலைப்பிலான கருத்தரங்கு நுங்கம்பாக்கத்திலுள்ள எம்.ஓ.பி., வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் நடந்தது.
இதில், தொழில் நிறுவனங்கள் மாணவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்ற புத்தகத்தை, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் வெளியிட, சென்னையில் உள்ள அமெரிக்க தூதர் ஆண்ட்ரூ சிம்கின் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ஆண்ட்ரூ சிம்கின் பேசியதாவது:  கடந்த நூறு ஆண்டுகளில் பொருளாதாரம் மற்றும் தொழில்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட  கல்வி வளர்ச்சி பெருமளவில் பங்காற்றியுள்ளது. முதலில் பள்ளி படிப்புக்கே வேலை என்ற நிலை மாறி தற்போது பட்டப் படிப்போடு, ஒரு நபரின் தனித்திறமைகள் ஆராயப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

உலகின் முன்னணி நிறுவனமான, மைக்ரோசாப்ட்டின் பெங்களூரில் உள்ள ஆராய்ச்சி மையத்தில், கல்லூரி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் தொழில் சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மாதிரியான பயிற்சிகளின் மூலம் மாணவர்கள் பிற்காலத்தில் தங்களது துறை சார்ந்த தொழிலில் செம்மையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது. இதை மற்ற தொழில் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு ஆண்ட்ரூ சிம்கின் பேசினார்.

துணை வேந்தர் திருவாசகம் பேசியதாவது: நாம் சுதந்திரம் அடைந்து ஆறு தலைமுறைகளை கடந்து விட்டோம். கல்வி வளர்ச்சியில் தன்னிறைவை அடைய முடியவில்லை. நம் நாட்டின் முன்னாள் பிரதமர் நேரு, தொழில், விவசாயம் மற்றும் கல்வி ஆகிய மூன்று துறைகளின் மூலமே நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த முடியும் என்றார்.

நாடு முழுவதும் 431 பல்கலைக் கழகங்களின்  துணை வேந்தர்கள் ஒருமனதாக சொல்வது உயர்கல்வியின் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பது. ஒரு மாணவரின் கல்வி அறிவானது, ஏட்டளவிலே மட்டும் இல்லாது, ஆக்க சக்தியாக பயன்படுத்தும் வகையில் அமைய வேண்டும். அப்படி அமைந்தால் தான் நாட்டுக்கும், வீட்டுக்கும் அது உபயோகமாக இருக்கும்.

கருத்தரங்குகள் நடத்துவதன் மூலம் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். ஆக்கபூர்வமாக செயல்பட சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்துறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு தெரிவித்து பின், மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். தொழில் நிறுவனங்கள் பகுதிக்கு ஒரு மாணவர் என்ற கணக்கில் தத்தெடுத்து பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு திருவாசகம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஜனாதிபதியின் முன்னாள் செயலர் முராரி, இந்திய வர்த்தகத் துறை தொழில் கூட்டமைப்பின் தமிழகத் தலைவர் ரபீக் அகமது, தமிழக பிரிவு இயக்குனர் வெங்கடகிரி, மாக்மில்லன் பத்திரிகையின் வெளியீட்டாளர் சன்ஜெய் சிங் மற்றும்  எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லூரியின் முதல்வர் நிர்மலா பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us