ஆய்வு மாணவர் சேர்க்கை விதிகள் தளர்வு: துணைவேந்தர் தகவல்
ஆய்வு மாணவர் சேர்க்கை விதிகள் தளர்வு: துணைவேந்தர் தகவல்
UPDATED : ஜன 26, 2010 12:00 AM
ADDED : ஜன 26, 2010 09:37 AM
புதுச்சேரி பல்கலைக்கழக நில அறிவியல் துறை கருத்தரங்க அறையில் பயோ இன்பர்மேட்டிக்ஸ் துறை சார்பில் வடிவமைப்பு உயிரியல் என்னும் சர்வதேச ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் மாத்தூர் வரவேற்றார். டீன் பிரியா டேவிதர் துவக்கவுரையாற்றினார். டில்லி அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் அமைச்சகத்தின் உயிர் தொழில்நுட்பவியல் ஆலோசகர் தன்மோகன் சிறப்புரையாற்றினார்.
விழாவில் துணைவேந்தர் தரீன் பேசியதாவது:
புதுச்சேரி பல்கலைக்கழக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிஎச்டி., ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் சேர்க்கை விதிமுறைகளில் சில தளர்வுகள் கொண்டு வந்துள் ளாம். இதன்படி புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்விற்கு பதிவு செய்யும் மாணவர்கள், உலகின் எந்த பல்கலைகழகத்திலும் உள்ள நெறியாளரின் மேற்பார்வையில் பிஎச்டி., படிப்பை தொடர முடியும்.
இதற்கு மாணவர்கள் விரும்பும் பல்கலைக்கழகம் தரமானதாக இருக்க வேண்டும். நெறியாளரின் ஒப்புதல் மிகவும் அவசியம். பல்கலைக் கழக மாணவர்களின் ஆய்வை மேம்படுத்தவும் டவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. அயல் நாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள், வல்லுநர்கள் விரும்பினால், ஒரு மாதம் முதல் இரண்டு ஆண்டு வரை இங்கு வந்து பணியாற்றலாம். இவர்களுக்குரிய ஊதியம், உதவியாளர் உள்பட அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இவ்வாறு துணைவேந்தர் தரீன் பேசினார்.
கருத்தரங்கில் புரதங்களின் பயன்பாடு, டி.என்.ஏ.,மற்றும் ஆர்.என்.ஏ. உள்பட பல்வேறு தலைப்புகளில் கருத்துகள் விவாதிக்கப்பட்டது. பேராசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
