தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வு எழுத இன்ஜினீயரிங் கல்லூரிமாணவர்களுக்கு ஐகோர்ட் அனுமதி

தேர்வு எழுத இன்ஜினீயரிங் கல்லூரிமாணவர்களுக்கு ஐகோர்ட் அனுமதி

தேர்வு எழுத இன்ஜினீயரிங் கல்லூரிமாணவர்களுக்கு ஐகோர்ட் அனுமதி


UPDATED : ஜன 26, 2010 12:00 AM

ADDED : ஜன 26, 2010 09:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2010 12:00 AM ADDED : ஜன 26, 2010 09:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கேரள எடக்குண்ணத்தை சேர்ந்த அருண்பிரபாகர் உட்பட நான்கு பேர் தாக்கல் செய்த ரிட் மனு:நாங்கள் செண்பகராமன்புதூர் எம்.இ.டி., இன்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ., படிக்கிறோம். வெளிநாடுகளில் இருந்து உறவினர்கள் அனுப்பும் பணம் (என்.ஆர்.ஐ.,கோட்டா) மூலம் படிக்க, எங்களுக்கு ஏற்கனவே அண்ணா பல்கலை, தொழில்நுட்ப கல்வி கமிஷனர் அனுமதியளித்தனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க மட்டுமே பணம் அனுப்பினால் பெறப்படும் எனவும், உறவினர்கள் அனுப்பினால் பெறப்பட மாட்டாது எனவும், உயர்கல்வித் துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை காரணம் காட்டி, எங்களை தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம், அனுமதி மறுத்து விட்டது. உயர்கல்வித்துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜன., 27, 29ம் தேதிகளில் நடக்கவுள்ள தேர்வுகளை எழுத அனுமதிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் நேரில் ஆஜராகி வாதடினர்.நீதிபதி வி.தனபாலன், மனுதாரர்களை தேர்வு எழுத அனுமதிக்கும்படி அண்ணா பல்கலை மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு இடைக்கால உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us