தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழிலதிபர்களுடனான கலந்தாய்வுகூட்டத்தில் கனிமொழி வாக்குறுதி

தொழிலதிபர்களுடனான கலந்தாய்வுகூட்டத்தில் கனிமொழி வாக்குறுதி

தொழிலதிபர்களுடனான கலந்தாய்வுகூட்டத்தில் கனிமொழி வாக்குறுதி


UPDATED : ஜன 26, 2010 12:00 AM

ADDED : ஜன 26, 2010 09:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2010 12:00 AM ADDED : ஜன 26, 2010 09:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தொழிலதிபர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சவுண்டையா தலைமை வகித்தார். அமைச்சர் நேரு முன்னிலை வகித்தார்.

எம்.பி., கனிமொழி பேசியதாவது:

திருச்சியில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு பதிவு முகாமில் முதல் நாளில் 27 ஆயிரம் பேரும், இண்டாம் நாள் 45 ஆயிரம் பேரும் மூன்றாவது நாளில் ஒரு லட்சத்து பத்தாயிரத்தை தொடும் அளவில் பதிவுகள் நடந்துள்ளது. இவர்களுக்கு வேலைகிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தித் தரவேண்டும். இதற்கு குறைந்தது 500 நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வேண்டும்.அரசியல் கட்சியனரால் மட்டும் முடியாது, நிறுவனங்களை சேர்ந்தவர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

நிறுவனங்களில் பணியாளர்கள் தேர்வு செய்யும் முறைபோன்று கல்வித்தகுதி, திறமை அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்தால் போதும். எந்தவித சிபாரிசும் செய்யமாட்டோம் என்பதை வாக்குறுதியாக அளிக்கிறோம்.
ஏ, பி, சி என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, நிறுவனங்களின் தேவையை உணர்ந்து 30 வயது குறைந்தவர்களை நேர்முகத்தேர்வுக்கு அனுப்பவுள்ளோம். முகாமில் பங்கேற்கும் நிறுவனங்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாக அரங்குகள் ஒதுக்கித்தரப்படவுள்ளது.

நிறுவனங்களுக்கும், எங்களுக்கும் புதிய அனுபவமாக இருப்பதால், வேலைதேடி வருபவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கிப்பாருங்கள், திறமையாக பணி செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.நிறுவனங்களுக்கு சந்தை நிலவரத்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் முகாம் அமையும். நிறுவனங்கள் தங்களுக்கு தெரிந்த பல நிறுவனங்களையும் முகாமுக்கு அழைத்து வந்து வேலைதேடுபவர்களுக்கு தங்களின் அனுபவத்தின் வாயிலாக வேலைவழங்க வேண்டும்.

இவ்வாறு கனிமொழி பேசினார்.

கலெக்டர் சவுண்டையா, முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.கே.எம்.சி., மருத்துவமனை நிர்வாகி சந்திரகுமார்: 150 செவிலியர்களை தேர்வு செய்ய தயாராக உள்ளோம்.

பெலிட்சியா தலைவர் ராஜப்பாராஜ்குமார்: பிட்டர், எலக்ட்ரிஷியன், மொக்கானிக் உட்பட ஆயிரத்து 500லிருந்து இரண்டாயிரம் பேரை வேலைக்கு தேர்வு செய்ய தயாராக உள்ளோம்.

சங்கம் ஓட்டல் நிர்வாகி வாசுதேவன்: விருதுநகர் முகாமில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு மதுரை, திருச்சி ஓட்டல்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வேலைக்கு வருபவர்கள் தொடர்ந்து பணியில் இருப்பதில்லை. இங்கு நடக்கும் முகாமிலும் தேர்வு செய்யத் தயராக உள்ளோம்.எம்.பி.கனிமொழி: வேலைதேடுபவர்கள் வாழும் பகுதியிலேயே வேலை வழங்கினால் வேலையை விட்டு செல்லமாட்டார்கள்.

டிடிட்சியா செயலாளர் அப்துல்ரஷீத், துணைத்தலைவர் கனகசபாபதி: படித்து தகுதியுள்ளவர்கள், பயிற்சி பெறாதவர்கள் என்று பிரித்து பயிற்சி அளித்து வேலை வழங்குவதுடன், சிலகட்டுப்பாடுகளும் விதிக்க வேண்டும்.
எம்.பி.,கனிமொழி: நாட்டிலுள்ள பெரிய நிறுவனங்களிலேயே இந்த பிரச்னை உள்ளது. தொடர்ச்சியாக பணியிலிருக்க வேண்டும் என்ற எண்ணம் சிலரிடம் இல்லை. கட்டுப்படுத்தி வேலையில் அமர்த்துவதற்கான சாத்தியம் இல்லை. மேல்படிப்பு, வேறு நிறுவனங்களுக்கான பணி, பல்வேறு சூழலில் வந்தவர்களை ஏற்கத்தான் வேண்டும்.

சென்னை சில்க்ஸ்: பல்வேறு பிரிவுகளின் கீழ் 1, 500லிருந்து 2,000ம் பேர் வரை தேர்வு செய்ய தயராக உள்ளோம்.

நெல்லையில் வேலைவாய்ப்புமுன்பதிவு முகாம்: நெல்லையில் விரைவில் வேலைவாய்ப்பு முன்பதிவு முகாம் நடத்தப்பட உள்ளது என்று எம்.பி., கனிமொழி திருச்சியில் கூறினார்.

வேலைவாய்ப்பு முன்பதிவு முகாம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. எம்.பி., கனிமொழி பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

வேலைவாய்ப்பு முன்பதிவு முகாம் காரியாப்பட்டி, விருதுநகர், கன்னியாகுமரி, வேலூர், கடலூர் தற்போது திருச்சியில் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் நெல்லையில் நடத்தப்பட உள்ளது. கடலூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்களில் 20 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.தகவல் தொழில்நுட்பம் உட்பட அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். கடலூரில் வேலைவாய்ப்பு நிலவரங்களை அறிந்து கொள்வதற்காக தகவல் மையம் துவக்கப்பட்டுள்ளது.அதேபோல், திருச்சியிலும் தகவல் மையம் துவங்க மாவட்ட செயலாளரிடம் பேசி முடிவு செய்யப்படும். படித்தவர்களுக்கு வேலை வழங்கும் திட்டமாக கட்சி சார்பில் வேலைவாய்ப்பு முன்பதிவு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு கனிமொழி கூறினார்.

பேட்டியின்போது, அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, நேரு, செல்வராஜ், கலெக்டர் சவுண்டையா, மேயர் சுஜாதா உட்பட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.இதைத் தொடர்ந்து லால்குடி, மணப்பாறை, தொட்டியம், முசிறி பகுதிகளில் நடந்த வேலைவாய்ப்பு முன்பதிவு முகாம்களை எம்.பி., கனிமொழி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us