தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ., மதிப்பெண் முறையில் மாற்றம்?

சி.பி.எஸ்.இ., மதிப்பெண் முறையில் மாற்றம்?

சி.பி.எஸ்.இ., மதிப்பெண் முறையில் மாற்றம்?


UPDATED : ஜன 26, 2010 12:00 AM

ADDED : ஜன 26, 2010 02:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2010 12:00 AM ADDED : ஜன 26, 2010 02:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இது குறித்த ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பொதுவாகவே பெற்றோர் தங்களது குழந்தைகளின் மதிப்பெண்ணை அவர்களுடைய சக மாணவர்களின் மதிப்பெண்ணோடு ஒப்பிடுவதால் மாணவர்களுக்கு மிகந்த
மன அழுத்தம் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதை நீக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் குறித்த பரிசீலனை மேற்கொள்ளப் படுகிறது. செகண்டரி போர்ட் நடத்தும் தேர்வுகளில் ஏற்கனவே மதிப்பெண்களை குறிப்பிடும் முறை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களோ பெற்றோரோ கேட்கும் பட்சத்தில் மட்டுமே இது தனியாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாநில தேர்வுக் குழுவிற்கும் இது தொடர்பாக சி.பி.எஸ்.இ., எழுதவுள்ளது. பிளஸ் 1 வகுப்பில் சேரும் மாணவர்களிடம் மதிப்பெண் குறித்த கட்டாயத்தைத் தளர்த்துமாறு இதில் கேட்கப்படவுள்ளது. பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் பெற்றோரிடம் பேசி 10ம் வகுப்புத் தேர்வை வாபஸ் பெறுமாறும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு பள்ளிக் கல்வி வாரியத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறும் போதும் மேல் நிலைப் படிப்புக்காக இந்தியாவை விட்டு வெளியே செல்லும் போதும் வெளிநாட்டு பள்ளிக்கல்வி வாரியம் சார்ந்த பள்ளிகளில் சேரும் போதும் வேலைக்கு உதவும் ஒகேஷனல் படிப்புகளில் சேர விரும்பினாலும் 10ம் வகுப்புத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டியுள்ளது. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மதிப்பெண் சான்றுகளும் சி.சி.இ., முடிவுகளும் சி.பி.எஸ்.இ.,யினால் உத்தரவாதம் பெறுவதால் இது குறித்து பெற்றோர் பீதி அடையத் தேவையில்லை என்று சி.பி.எஸ்.இ., கூறுகிறது.

10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர்களுக்கு மொத்தம் 2 தடவை ஆப்டிடியூட் தேர்வு எழுதி, விரும்பும் புலத்தைத் தேர்வு செய்யும் வாய்ப்பு தரப்படவுள்ளதாகவும் சி.பி.எஸ்.இ., கூறுகிறது.

மிகச் சிறந்த சாதனையாளர்களுக்கு புரபீசியன்சி தேர்வு எனப்படும் திறனறியும் தேர்வு நடத்தப்பட்டு அதன் படி அவர்கள் தரம் பிரிக்கப்படுவர். இது மனப்பாடத் திறனை பரிசோதிக்காமல் செயல் திறனை பரிசோதிப்பதாக அமையும். இந்தத் தேர்வுகள் 10ம் வகுப்புத் தேர்வு முøந்த பின் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத வாக்கில் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. தொழில் நுட்ப ரீதியான நிறுவனங்களின் மூலமாக தேர்வை நடத்தி சி.பி.எஸ்.இ.,யும் அந்த நிறுவனமும் இணைந்து சான்று வழங்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. பள்ளித் தலைமையாசிரியர்களுடன் சி.பி.எஸ்.இ., தலைவர் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் இவை விவாதிக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us