தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரியில் ஒரு ரூபாய் கட்டணத்தில் மாணவர் பேருந்து சேவை

புதுச்சேரியில் ஒரு ரூபாய் கட்டணத்தில் மாணவர் பேருந்து சேவை

புதுச்சேரியில் ஒரு ரூபாய் கட்டணத்தில் மாணவர் பேருந்து சேவை


UPDATED : ஜன 27, 2010 12:00 AM

ADDED : ஜன 27, 2010 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2010 12:00 AM ADDED : ஜன 27, 2010 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் எந்த இடத்தில் இருந்தும் தங்களது பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல ஒரு ரூபாய் கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இத்திட்டத்தின் துவக்க விழா, புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகில் நடந்தது. மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதல்வர் வைத்திலிங்கம், கண்ணன் எம்.பி., ஆகியோர் மாணவ, மாணவியருக்கான சிறப்பு பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

விழாவில் முதல்வர் வைத்திலிங்கம் பேசியதாவது:காங்., அரசு ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றி வருகிறது. மாணவர்களுக்கான சிறப்பு பஸ் மூலம் ஏழை குழந்தைகளின் கஷ்டங்கள் குறைய வாய்ப்புள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இன்னும் மூன்று மாதத்தில் இலவச கலர் டிவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு முதல்வர் வைத்திலிங்கம் பேசினார்.
 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us