தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிற மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கு சிக்கல்

பிற மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கு சிக்கல்

பிற மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கு சிக்கல்


UPDATED : ஜன 28, 2010 12:00 AM

ADDED : ஜன 28, 2010 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2010 12:00 AM ADDED : ஜன 28, 2010 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக பாடத்திட்டத்திற்கு நிகராக, வெளி மாநில பாடத்திட்டங்கள் இல்லை என்பதால், 2007-08ம் ஆண்டு அல்லது அதற்கு முன் சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே மதிப்பீடு சான்றிதழ் வழங்க முடியும் என்றும், அதன்பின்னர் சான்றிதழ் வாங்கியவர்கள், மதிப்பீடு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க வேண்டாம் என்றும், ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் அறிவித்துள்ளது.


தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் சேர்ந்து படிக்கின்றனர். குறைந்த கட்டணம், எளிதான பாடத்திட்டங்கள் என பல்வேறு காரணங்களால், பிற மாநிலங்களில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது.


மாணவர்கள் படிப்பை முடித்ததும், வெளி மாநில பாடத்திட்டம், தமிழக அரசின் பாடத்திட்டத்திற்கு இணையானது என்பதற்கு, தமிழக அரசிடம் இருந்து, ‘மதிப்பீட்டுச் சான்றிதழ்’ (எவால்யூவேஷன் சர்ட்டிபிகேட்) பெற வேண்டும். இந்த சான்றிதழ் பெற்றதும், தமிழக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர்.


இந்நிலையில், ஆசிரியர் பயிற்சி இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பு:
வெளி மாநிலங்களில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி படித்த மாணவர்களின் சான்றிதழ்களை, விதிமுறைகளின்படி சரிபார்த்து, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு, தமிழக ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி சான்றிதழுக்கு இணையானது என, ஆசிரியர் கல்வி இயக்ககத்தால் மதிப்பீடு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சியின் பாடத்திட்டம், தேசிய கலைத்திட்டம் 2005ன்படி மாற்றி அமைக்கப்பட்டு, 2008-09ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், வெளி மாநிலங்களின் பாடத்திட்டம், தமிழக பாடத் திட்டத்திற்கு இணையானதாக இன்னும் மாற்றப்படவில்லை.


மதிப்பீடு செய்வது குறித்து, தமிழக அரசு கடந்த டிசம்பர்  3ம் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், 2007-08ம் ஆண்டு அல்லது அதற்கு முன், வெளி மாநில ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு மட்டும் மதிப்பீடு சான்றிதழ் வழங்கலாம் என்றும், 2008-09 அல்லது அதற்குப் பின் வெளி மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சியில் சேரும் மாணவர்களின் சான்றிதழ்கள் மதிப்பீடு செய்ய எடுத்துக்கொள்ள தேவையில்லை.


வெளி மாநில அரசு, தங்கள் மாநிலத்தில் படித்த மாணவர்களின் சான்றிதழ்களை மதிப்பீடு செய்யும்படி, தமிழக அரசை கேட்கும்போது, அம்மாநில அரசு நிர்ணயித்துள்ள பாடத் திட்டத்தை, தமிழ்நாடு மாநில வளக்குழு ஆய்வு செய்து, அம்மாநில பாடத்திட்டம், தமிழக பாடத்திட்டத்திற்கு இணையானது என்று சான்றளித்தால் மட்டும், அம்மாநிலத்தில் பயின்ற மாணவர்களின் சான்றிதழ்களை மதிப்பீடு செய்து சான்றிளிக்கலாம் என்றும், தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.


எனவே, அரசாணையின்படி, 2007-08ம் ஆண்டு அல்லது அதற்கு முன் வெளி மாநில ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் மட்டும், மதிப்பீடு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம். அதன்பின், சான்றிதழ் பெற்றவர்கள், மதிப்பீடு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க வேண்டாம். இவ்வாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், 2008-09ல் வெளி மாநிலங்களில் சேர்ந் துள்ள மாணவர்கள், பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us