UPDATED : நவ 15, 2023 12:00 AM
ADDED : நவ 15, 2023 10:15 AM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் மணிவாசகன் தலைமையில் நடந்தது.மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன் மாநில அளவில் நவ.25ல் நடத்தப்படும் உண்ணாவிரதம் குறித்து பேசினார். அல்அமீன் பள்ளி தலைமையாசிரியர் ஷேக்நபி முன்னிலை வகித்தார். மதுரை மாவட்ட தலைவர் சதீஷ்குமார், சட்டச் செயலாளர் ராஜேந்திரன், செயலாளர் முரளி உட்பட விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
