தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியர் எரித்துக் கொலை: ஆஸியில் மேலும் ஒருவர் கைது

இந்தியர் எரித்துக் கொலை: ஆஸியில் மேலும் ஒருவர் கைது

இந்தியர் எரித்துக் கொலை: ஆஸியில் மேலும் ஒருவர் கைது


UPDATED : ஜன 30, 2010 12:00 AM

ADDED : ஜன 30, 2010 12:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2010 12:00 AM ADDED : ஜன 30, 2010 12:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு


ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் மீது, சமீப காலமாக இனவெறி தாக்குதல் நடத்தப் பட்டு வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை பத்துக்கும் மேற் பட்ட இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன், பிரிஸ் பேனில் வாடகை டாக்சி ஓட்டும் இந்திய இளைஞர்கள் மூன்று பேரும், பிசா டெலிவரி செய்யும் இந்திய இளைஞர் ஒருவரும் தாக்கப்பட்டனர்.

இதற்கிடையே, கடந்த டிசம்பரில் நியூ சவுத் வேல்சில் இந்திய இளைஞர் ரன்ஜோத் சிங் என்பவரின் உடல், தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் பிணமாக கிடந்தது. இந்த கொலை தொடர் பாக, இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர், சிட்னியின் தென்பகுதியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக, வாகா என்ற இடத்தில் மேலும் ஒரு இளைஞர் நேற்று கைது செய்யப் பட்டார். இவரை பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப் படவில்லை.


ரன்ஜோத் சிங்கின் உடல், விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. டில்லி விமான நிலையத் தில் அவரது உடலுக்கு, மத்திய வெளியுறவு இணை அமைச்சர் பிரினீத் கவுர், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின், இறுதிச் சடங்கிற்காக அவரது உடல், பஞ்சாப் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.


இதுகுறித்து அமைச்சர் பிரினீத் கவுர் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதில், விரைவில் ஏதாவது ஒரு முடிவு எட்டப்படும். இதுகுறித்து விசாரிப்பதற்கு, உயர் மட்ட கமிட்டி ஒன்றை ஆஸ்திரேலிய அரசு அமைத்துள்ளது.
 
இந்த கமிட்டி, ஒவ்வொரு சனி, ஞாயிறு கிழமைகளிலும் கூடி, இதுகுறித்து ஆலோசித்து வருகிறது. இந்தியர்கள் மீது தாக்குதல் நடத் தப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆஸ்திரேலியா, இறையாண்மை கொண்ட நாடு. இந்த விஷயத்தில் அந்நாட்டு அரசால் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்து வருகிறது. இவ்வாறு பிரினீத் கவுர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us