UPDATED : டிச 27, 2010 12:00 AM
ADDED : டிச 27, 2010 03:52 PM
அ நிறம் | அளவு
பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில், நண்பர்கள் இல்லாத குழந்தைகள் எதிர்மறை எண்ணங்களை உடையவர்களாகவும்,கூச்சப்பட கூடியவர்களாகவும் உள்ளனர் என கான்கோர்டியா, புளோரிடா அட்லாண்டிக் மற்றும் வெர்மன்ட் ஆகிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்காக மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 130 பெண் குழந்தைகள், 101 ஆண் குழந்தைகளை ஆய்வு செய்ததில் நண்பர்கள் இல்லாத குழந்தைகள் ஊக்கமில்லாமல் இருப்பது தெரிய வந்தது. இதனை சரிசெய்வதற்கு குறைந்தது ஒரு நண்பராவது இருக்க வேண்டும் என அந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
