தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிப். 1ம் தேதி அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா

பிப். 1ம் தேதி அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா

பிப். 1ம் தேதி அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா


UPDATED : ஜன 29, 2011 12:00 AM

ADDED : ஜன 29, 2011 05:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2011 12:00 AM ADDED : ஜன 29, 2011 05:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில், 2,737 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்.


அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மன்னர் ஜவகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி - எம்.ஐ.டி., - ஏ.சி.டெக்., - எஸ்.ஏ.பி., ஆகிய கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, பிப்ரவரி 1ம் தேதி மாலை 5:30 மணிக்கு நடக்கிறது. ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் மான்தா, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.


பட்டமளிப்பு விழாவில், 1,556 இளநிலை மாணவர்கள், 1,174 முதுநிலை மாணவர்கள் மற்றும் 7 எம்.எஸ்., மாணவர்கள் என, மொத்தம் 2,737 பேர் பட்டம் பெறுகின்றனர். இதில், 196 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.


கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும், ‘குருஷேத்ரா’ தொழில் நுட்ப - மேலாண்மை விழா, ஐந்தாவது ஆண்டாக பிப்ரவரி 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடக்கிறது. இவ்விழாவை, விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை துவக்கி வைக்கிறார். இவ்விழாவில், 80 நாடுகளை சேர்ந்த 16 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இவ்விழாவில் மாணவர்கள் 10 லட்ச ரூபாய் பரிசாக வெல்லவும், 30 மாணவர்கள், ‘நானோபைட்ஸ், குளோபல் ஸ்காலர், தரோகுட்’ ஆகிய மூன்று நிறுவனங்கள் கல்வி உதவித்தொகை பெறவும் வாய்ப்புள்ளது.


ரோபோட்டிக்ஸ், ஆன்-லைன் நிகழ்ச்சிகள், மேலாண்மை, குவிஸ், பொறியியல் பிரிவுகளில் மொத்தம் 42 வகையான நிகழ்ச்சிகள் உள்ளன. நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஆண்ட்ரூ கிரம்பர்க், இரட்டை கோபுர வடிவமைப்பாளர் லெஸ்லி ராபர்ட்ஸ், ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் பேராசிரியர் தருண் கண்ணா உள்ளிட்டோர் மாணவர்களிடையே உரையாற்றுகின்றனர். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.


தரத்தை உயர்த்த வேண்டும்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் நிருபர்களிடம் கூறும் போது, ‘தமிழகத்தில் தற்போது 474 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பி.இ., - பி.டெக்., படிப்பில் மொத்தம் இரண்டு லட்சத்து 8,000 இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் முடிவில், 30 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. பொறியியல் படிப்பில், மாணவர்களுக்கு போதிய இடங்கள் உள்ளன; இனி தரத்தை மேம்படுத்த வேண்டும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us