தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/-ஆஸ்திரேலிய இந்திய மாணவர்களின் எதிர்பார்ப்பு

-ஆஸ்திரேலிய இந்திய மாணவர்களின் எதிர்பார்ப்பு

-ஆஸ்திரேலிய இந்திய மாணவர்களின் எதிர்பார்ப்பு


UPDATED : ஜன 31, 2011 12:00 AM

ADDED : ஜன 31, 2011 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2011 12:00 AM ADDED : ஜன 31, 2011 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆஸ்திரேலியாவில் படிப்பதற்காக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆண்டுதோறும் அங்கு செல்கின்றனர். மேலும் அதிகளவிலான இந்தியர்கள் வேலையும் பார்த்து வருகின்றனர். இவர்கள் மீது கடந்த இரண்டு வருடங்களாக இனவெறி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.


இந்திய அரசும் இது குறித்து அந்நாட்டு அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது. இருப்பினும் மாணவர்கள் மத்தியில் ஒருவித பயம் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் வருகையை ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடக்கும் காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1986ம் ஆண்டு மறைந்த இந்திய பிரதமர் ராஜிவுக்கு பிறகு எந்த ஒரு இந்திய பிரதமரும் இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதில்லை.


இதனால் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய சார்பில் 1988க்கு பிறகு, மூன்று முறை 2000, 2006 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் அந்நாட்டு பிரதமர்கள் இந்தியா வந்துள்ளனர்.


ஆஸ்திரேலியாவில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வரும் நாட்டு மக்களின் வரிசையில் பிரிட்டனுக்கு பிறகு, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய மாணவர்களை தவிர மெடிக்கல், ரெஸ்ட்டாரன்ட், ஜூவல்லரி, ரியல் எஸ்டேட், டிராவலிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகளவிலான இந்தியர்கள் அங்கு பணிபுரிகின்றனர். எனவே ஆஸ்திரேலியாவில் வாழும் மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மக்கள், பிரதமர் மன்மோகன் சிங் வருகையை எதிர்பார்த்து உள்ளனர்.


பிரதமரின் வருகை மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவு மேம்படும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அவர்களது நம்பிக்கை மட்டுமல்ல இங்குள்ள இந்திய மக்களின் எதிர்பார்ப்பும் அதுதான். இது நிறை வேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us