தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 1 தேர்வு; ’ஹால் டிக்கெட்’ வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 1 தேர்வு; ’ஹால் டிக்கெட்’ வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 1 தேர்வு; ’ஹால் டிக்கெட்’ வெளியீடு


UPDATED : அக் 30, 2015 12:00 AM

ADDED : அக் 31, 2015 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2015 12:00 AM ADDED : அக் 31, 2015 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர் போன்ற 74 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, வரும் நவம்பர் 8ம் தேதி அன்று முற்பகல் தமிழகம் முழுவதும் உள்ள 33 தேர்வு மையங்களில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. 

இப்பணியிடங்களுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து இன்று தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவெண்ணை, இணையதளத்தில் உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

இது குறித்து சந்தேகம் ஏதேனும் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1800 425 1002 மூலமாகவோ கேட்டு தெளிவு பெறலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

மேலும் விவரங்களுக்கு:
www.tnpsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us