தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆல்வின் கல்வி குழும பள்ளிகள் சாதனை

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆல்வின் கல்வி குழும பள்ளிகள் சாதனை

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆல்வின் கல்வி குழும பள்ளிகள் சாதனை


UPDATED : ஏப் 17, 2026 05:23 PM

ADDED : ஏப் 17, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 17, 2026 05:23 PM ADDED : ஏப் 17, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சமீபத்தில் வெளியிடப்பட்ட, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், சீயோன் மற்றும் ஆல்வின் பள்ளி மாணவ, மாணவியர், பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

ஆல்வின் மெமோரியல் பொதுப் பள்ளியில், சேலையூரைச் சேர்ந்த ஸ்ரீநிதி குமரேசன் 492 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றார். அபிராமவல்லி மற்றும் அனுஷ் ஜோனி கார்த்திக் ஆகியோர் 489 மதிப்பெண்களும், கிரிஷா 487 மதிப்பெண்களும் பெற்றனர்.

சீயோன் இன்டர்நேஷனல் பொதுப் பள்ளியில், மப்பேடு மாணவி ரக் ஷிதா 487 மதிப்பெண்கள் பெற்றார். நிதிஷ் மற்றும் கவிநயா ஆகியோர் 486 மதிப்பெண்களும், வர்ஷினி 485 மதிப்பெண்களும் பெற்றனர்.

ஆல்வின் இன்டர்நேஷனல் பொதுப் பள்ளியில், படப்பை மாணவி சிவானி 487 மதிப்பெண்கள் பெற்றார். வெற்றிசெல்வன் மற்றும் தனிஷ்கா ஆகியோர், 484 மதிப்பெண்களும், பிரஜ்வால் 483 மதிப்பெண்களும் பெற்றனர்.

பல்வேறு பாடங்களில், மொத்தம் 119 மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். பள்ளிகள் துவங்கியதிலிருந்து, அனைத்து பொதுத் தேர்வுகளிலும், 100 சதவீத தேர்ச்சி விகிதத்தை, சீயோன் மற்றும் ஆல்வின் பள்ளிகள் தொடர்ந்து பேணி வருகின்றன. இவ்வாண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்ற, 930 மாணவ மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மூத்த முதல்வரும், பள்ளி தலைவருமான டாக்டர் என்.விஜயன், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களை பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us