ஆத்துாரில் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தை அதிகாரிகள் ஆய்வு
ஆத்துாரில் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தை அதிகாரிகள் ஆய்வு
UPDATED : நவ 24, 2025 08:49 AM
ADDED : நவ 24, 2025 08:50 AM

ஆத்துார்:
ஆத்துாரில் புதிதாக அமைக்கப்படும் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களில், சேலம் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என, மொத்தம் 203 உள்ளன. சேலம் மற்றும் சங்ககிரி கல்வி மாவட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வுகளுக்கு, ஆறு இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படுகிறது.பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் மையாக, ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், ப்ளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் மையமாக, ஆத்துார் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த மையங்களில், குடிநீர், மின்சாரம், வகுப்பறை போன்ற பாதுகாப்பு வசதிகள் குறித்து, நேற்று, சேலம் மாவட்ட கல்வி அலுவலர் நரசிம்மன் தலைமையிலான கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், விடைத்தாள் திருத்தும் மையம், வழிப்பாதை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, தலைமை ஆசிரியர் சந்திரசேகரிடம் பாதுகாப்பு வசதி குறித்து, மாவட்ட கல்வி அலுவலர் கேட்டறிந்தார்.

