தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘என்.சி.சி.,யில் 13 லட்சம் மாணவர்கள்’

‘என்.சி.சி.,யில் 13 லட்சம் மாணவர்கள்’

‘என்.சி.சி.,யில் 13 லட்சம் மாணவர்கள்’


UPDATED : டிச 03, 2009 12:00 AM

ADDED : டிச 03, 2009 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2009 12:00 AM ADDED : டிச 03, 2009 06:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காலாப்பட்டு: புதுச்சேரி பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் என்.சி.சி.,பணிகளை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் தரீன் தெரிவித்தார்.


புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் தரீனுக்கு என்.சி.சி., யின் கவுரவ கர்னல் பதவி பிரமாணம் வழங்கும் விழா பல்கலைக் கழக நேரு அரங்கில் நேற்று நடந்தது.


தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் என்.சி.சி.,இயக்குனரக துணை இயக்குனர் கமோடர் சர் தாஸ் இமாம் பேசுகையில், ‘இந்தியாவில் 1948ம் ஆண்டு என்.சி.சி., ஆரம்பிக்கப்பட்டது. துவக்கத்தில் இரண்டு இயக்குனரகமும், 31 ஆயிரம் பேரும் இருந்தனர். தற்போது 17 இயக்குனரகங்களில் 13 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதனை 15 லட்சமாக உயர்த்த முயன்று வருகிறோம். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் பகுதிகளில் என்.சி.சி., யில் தற்போது ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் இருக்கின்றனர். புதுச்சேரியில் 5 ஆயிரத்தூக்கும் மேற்பட்ட மாணவர்கள் என்.சி.சி., யில் சேர்ந்துள்ளனர். என்.சி.சி., யில் தற்போது ஜூனியர் மாணவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி வருகின்றனர். இதுபோல் மருத்துவம், பொறியியல்,கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் சீனியர் மாணவர்களின் என்.சி.சி.,பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்’ என்றார்.


விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் தரீனுக்கு கவர்னர் இக்பால் சிங் பதவி பிரமாணம் செய்து வைத்து, என்.சி.சி.,யின் இரண்டு ஸ்டார், அசோக சக்கர சின்னம், ரெட் டேப்ஸ்களை வழங்கி பாராட்டி பேசினார். விழாவில் துணைவேந்தர் தரீன் ஏற்புரை வழங்கி பேசுகையில்,‘படிக்கும்போது நானும் என்.சி.சி., யில் சேர்ந்து செயல்பட்டுள் ளேன். பொறுப்புள்ள குடிமகனை உருவாக்கும் அமைப்பாக என்.சி.சி., பல்வேறு கல்லூரிகளில் செயல் பட்டு வருகிறது. பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் என்.சி.சி., பணியை விஸ்தரிக்க நடவடிக்கை எடுப்பேன்’ என்றார். இந்நிகழ்ச்சியில் என்.சி.சி., குரூப் கமாண்டர் டி.பி.,சிங், உயர் அதிகாரிகள், அலுவலர்கள், படை மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us