UPDATED : ஜூன் 17, 2024 12:00 AM
ADDED : ஜூன் 17, 2024 09:33 AM
விழுப்புரம்:
விழுப்புரம் பேராசிரியரிடம் ரூ.1.45 லட்சம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம், வி.கே.எஸ்., பாண்டியன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன், 44; பேராசிரியர். இவர், தான் பயன்படுத்தி வந்த கிரெடிட் கார்டுகளில் இணைத்துள்ள மொபைல் எண்ணை மாற்றம் செய்த 3 வாரங்களுக்கு முன் கிரெடிட் கார்டு பிரிவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி இளங்கோவனை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், நுங்கம்பாக்கம் வங்கி கிளை கிரெடிட் கார்டு பிரிவில் இருந்து பேசுவதாக கூறியவர், இளங்கோவனின் கிரெடிட் கார்டு ரிவார்ட் வெகுமதியை, ரீடிம் செய்யாமல் உள்ளதை திருத்தம் செய்து, பணம் தருவதாக கூறினார். அதனை நம்பிய இளங்கோவன், கிரெடிட் கார்டில் இறுதியாக உள்ள 8 எண் மற்றும் ஓ.டி.பி., எண்ணையும் மர்ம நபருக்கு தெரிவித்தார்.
சற்று நேரத்தில் அவரது கிரெடிட் கார்டில் இருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 64 ரூபாய் மர்ம நபர் திருடியது தெரிய வந்தது. இளங்கோவன் புகாரின் பேரில், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.