UPDATED : ஆக 27, 2024 12:00 AM
ADDED : ஆக 27, 2024 09:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் மருத்துவ அதிகாரி, செவிலியர் உட்பட, 150 பணியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் ஒப்பந்த அடிப்படையில், 30 மருத்துவ அதிகாரி; 32 செவிலியர்; 12 பல்நோக்கு சுகாதார பணியாளர்; 66 சுகாதார உதவியாளர்; 5 உளவியலாளர்; 5 சமுதாய பணியாளர் என, 150 இடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை, https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, செப்., 6ம் தேதிக்குள் மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு அனுப்ப வேண்டும்.

