sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இளைஞர்களிடம் ரூ.1.90 லட்சம் மோசடி

/

இளைஞர்களிடம் ரூ.1.90 லட்சம் மோசடி

இளைஞர்களிடம் ரூ.1.90 லட்சம் மோசடி

இளைஞர்களிடம் ரூ.1.90 லட்சம் மோசடி


UPDATED : ஏப் 07, 2026 11:06 AM

ADDED : ஏப் 07, 2026 11:08 AM

Google News

UPDATED : ஏப் 07, 2026 11:06 AM ADDED : ஏப் 07, 2026 11:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் வேலை தருவதாக கூறி ரூ.1.90 லட்சம் வரை மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை வடகரை பகுதியை சேர்ந்தவர் 25வது இளைஞர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளம்பரம் பார்த்துள்ளார்.

அதில் பணம் முதலீடு செய்தால் ஒரு வாரத்தில் இரண்டு மடங்காக லாபம் கிடைக்கும் என்று இருந்துள்ளது. அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அவர் பேசியதை நம்பிய இளைஞர் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.10 ஆயிரம் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் லாபத்தொகை கொடுக்காமல் இளைஞரை ஏமாற்றினார்.

இதே போல் கடந்த மார்ச் 25ல் இளையான்குடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்ணிற்கு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவது போல் பேசி கடன் தருவதாக ரூ.52 ஆயிரம் மோசடி செய்துள்ளனர்.

தேவகோட்டை அண்ணாநகரை சேர்ந்த 37 வயது பெண்ணிடமும் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதுபோல் பேசி கடன் தருவதாக ரூ.89 ஆயிரத்து 125 மோசடி செய்துள்ளனர்.

திருப்புவனம் அகரம் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞரிடம் ஏர்போர்ட்டில் வேலை தருவதாக கூறி ரூ.42 ஆயிரம் மோசடி செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us